எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 25 ஜூலை, 2014

THAVALAI VADAI .தவலை வடை. குங்குமம் தோழியில்

THAVALAI VADAI .தவளை வடை. 

 THAVALAI VADAI:-

NEEDED:-
RAW RICE - 50 GMS
BOILED RICE - 50 GMS
ORID DHAL - 50 GMS
THUVAR DHAL - 50 GMS
CHANNA DHAL - 50 GMS
MOONG DHAL - 50 GMS
SAGO - 50 GMS
RED CHILLIES - 4 NOS
SOMPH ( ANISEEDS) - 1 TSP
GRATED COCONUT - 1 CUP
BIG ONION - 1 CHOPPED
SALT - 1 1/2 TSP
MUSTARD - 1 TSP
OIL - FOR FRYING

METHOD:-

WASH AND SOAK RICE AND DHALS. POWDER RED CHILLIES, SOMPH WITH SALT. ADD THE SOAKED RICE AND DHAL AND GROUND COARSLY. HEAT 1 TSP OIL IN A PAN ADD MUSTARD,. WHEN IT SPLUTTERS ADD ONION & SAUTE WELL. ADD GRATED COCONUT AND STIRR WELL. MIX IT WITH THE BATTER. HEAT OIL IN A PAN. DROP ONE SPOON BATTER IN OIL BY USING A SMALL CURVY LADDLE. FRY VADAIS CRISPLY AND SERVE HOT WITH COCONUT CHUTNEY OR KATHAMBA CHUTNEY.

தவளை வடை:-

தேவையானவை:-
பச்சரிசி - 50 கிராம்
புழுங்கரிசி - 50 கிராம்
உளுந்து - 50 கிராம்
துவரம் பருப்பு - 50 கிராம்
கடலைப் பருப்பு - 50 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
ஜவ்வரிசி - 50 கிராம்
வர மிளகாய் - 4
சோம்பு ( பெருஞ்சீரகம்) - 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 கப்
பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரியவும்.
உப்பு - 1 1/2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-

அரிசி பருப்புக்களை நன்கு கழுவி ஊறவைக்கவும். மிளகாய் , சோம்பு, உப்பை பொடியாக்கவும். அத்துடன் அரிசி பருப்பு ஜவ்வரிசி சேர்த்து அரைக்கவும். ஒரு பானில் ஒரு டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து அதில் வெங்காயத்தை நன்கு வதக்கவும். அதில் துருவிய தேங்காயைப் போட்டுப் பிரட்டி அரைத்த மாவில் கொட்டி நன்கு கலக்கவும். எண்ணெயைக் காயவைத்து ஒரு சின்ன குழிவான கரண்டியில் மாவை எடுத்து ஊற்றவும். இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து தேங்காய்ச் சட்னி அல்லது கதம்பச் சட்னியுடன் சுடச் சுடப் பரிமாறவும்.

திங்கள், 21 ஜூலை, 2014

COW PEAS, DRIED MANGO, AUBERGINE, LAM LAM GRAVY. கத்திரி வற்றல், அவரை வற்றல், மாவற்றல்,தட்டைப்பயறு குழம்பு.குங்குமம் தோழியில்.

COW PEAS, DRIED MANGO, AUBERGINE, LAM LAM  GRAVY. கத்திரி வற்றல், அவரை வற்றல், மாவற்றல்,தட்டைப்பயறு  குழம்பு.

COW PEAS, DRIED MANGO, AUBERGINE, LAM LAM  GRAVY
NEEDED:-
COW PEAS - 1 CUP .
DRIED MANGO PIECES - 10 NOS.
DRIED AUBERGINE VATHTHAL - 8 NOS.
DRIED LAM LAM - 8 NOS.
SMALL ONION - 10 NOS.
GARLIC - 2 PODS.
TOMATO - 1 NO.
CHILLI POWDER - 11/2 TSP
CORRIANDER POWDER - 1 TBLSPN.
TURMERIC POWDER - 1 PINCH.
TAMARIND - 1 AMLA SIZE.
SALT - 1 1/2 TSP
OIL - 2 TSP
MUSTARD - 1 TSP
JEERA - 1 TSP.
CURRY LEAVES - 1 ARK.
METHOD :-
FRY THE COWPEAS IN A SHALLOW BOTTOMED PAN FOR 2 MINUTES. POUR WATER AND PRESSURE COOK FOR 4 WHISTLES. COOK THE DRIED MANGOES, AUBERGINE, LAM LAM., ONION., TOMATO ALSO IN A SEPERATE CUP IN COOKER. AFTER THE VAPOUR RELEASES MIX THE PEAS AND MANGOES WELL ADD THE CHILLI PWDR., 
 CORRIANDERPWDR., AND TURMERIC POWDER. SOAK TAMARIND IN 2 CUPS OF WATER TAKE THE PULP AND ADD IT WITH SALT IN THE GRAVY . BRING TO BOIL AND SIMMER FOR 5 MINUTES. ADD THE CRUSHED GARLICS AND TOSS IT WITH MUSTARD AND JEERA IN OIL. SERVE HOT WITH PLAIN RICE OR UTHAPPAMS OR IDDLIES. 
கத்திரி வற்றல், அவரை வற்றல், மாவற்றல்,தட்டைப்பயறு  குழம்பு
தேவையானவை :-
தட்டைப்பயறு ( காராமணி ) - 1 கப்
மாங்காய் வற்றல் - 10
கத்திரி வத்தல் - 8 
அவரை வத்தல் - 8
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 2
தக்காளி - 1
மிளகாய்ப்பொடி - 2 டீஸ்பூன்
மல்லிப்பொடி - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்பொடி - 1 சிட்டிகை.
புளி - 1 நெல்லிக்காய் அளவு
உப்பு - 1 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை:-
தட்டைப்பயறை வறுத்து பிரஷர் குக்கரில் 4 விசில் வரும்வரை வேகவிடவும். மாவற்றல்.,கத்திரி வற்றல், அவரை வற்றல்,  தக்காளி., வெங்காயத்தை சின்ன தட்டில் குக்கரில் வைத்து வேகவிடவும். ஆவி வெளியேறியதும் இரண்டையும் நன்றாக கலந்து மிளகாய் பொடி., மல்லி பொடி., மஞ்சள் பொடி போடவும். புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து உப்புடன் குழம்பில் சேர்க்கவும். கொதிவந்தபின் சிம்மிம் 5 நிமிடம் வைத்து., எண்ணையில் கடுகு., ஜீரகம் தாளித்து கொட்டவும். பூண்டு தட்டிப் போட்டு இறக்கவும். இதை சாதம் அல்லது ஊத்தப்பம் அல்லது இட்லியுடன் பரிமாறவும்.

செவ்வாய், 15 ஜூலை, 2014

DRUMSTICK LEAVES &PLANTAIN FLOWER THUVATTAL. . முருங்கைக்கீரை, வாழைப்பூ துவட்டல்.. குங்குமம் தோழியில்.

DRUMSTICK LEAVES &PLANTAIN FLOWER THUVATTAL. . முருங்கைக்கீரை, வாழைப்பூ துவட்டல்.. 

DRUMSTICKLEAVES&PLANTAINFLOWER THUVATTAL:-

NEEDED :-

DRUMSTICK LEAVES - 1 BUNCH

PLANTAIN FLOWER - HALF ( PREFERRABLY INNER TENDER PART)

PARA BOILED THUVAR DHAL - 1/2 CUP

BIG ONION - 1NO. PEELED & CHOPPED.

RED CHILLIES - 2 NOS. HALVED.

OIL - 2 TSP

MUSTARD - 1 TSP

ORID DHAL - 1 TSP

SALT- 1/2 TSP


METHOD:-

WASH AND SHED THE DRUMSTICK LEAVES. PEEL AND FINELY CHOP THE PLANTAIN FLOWER. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL., HALVED RED CHILLIES., AND CHOPPED ONION. SAUTE FOR 2 MINUTES ADD DRUMSTICK LEAVES. SAUTE FOR 2 MINUTES AND COVERED IT WITH A LID. ADD CHOPPED PLAINTAIN FLOWER AND SAUTE WELL. SPRAY SOME WATER . KEEP COVERED. COOK FOR 5 MINUTES . THEN ADD SALT AND PARA BOILED THUVAR DHAL. STIRR WELL AND COOK FOR 2 MINUTES . SERVE HOT WITH SAMBAR RICE OR VATHAK KUZAMBU RICE OR PULKKUZAMBU RICE.


முருங்கைக்கீரை., வாழைப்பூ துவட்டல்:-

தேவையானவை:-

முருங்கைக்கீரை - 1 கட்டு

வாழைப்பூ - பாதி ( வடை செய்தபின் மீதமிருக்கும் மென்மையான பகுதி)

பதமாக வேகவைக்கப்பட்ட துவரம்பருப்பு - 1/2 கப்

பெரிய வெங்காயம் - 1 தோலூரித்து பொடியாக அரியவும்.

வர மிளகாய் - 2 ( இரண்டாகக் கிள்ளி வைக்கவும்)

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்து - 1 டீஸ்பூன்

உப்பு - 1/2 டீஸ்பூன்.


செய்முறை:-

முருங்கைக் கீரையைக் கழுவி சுத்தம் செய்து உதிர்க்கவும். வாழைப்பூவை உரித்துப் பொடியாக நறுக்கவும். ( நரம்பு இருக்காது உள் பகுதிகளில்) . பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போடவும். வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும்., வரமிளகாய்., வெங்காயம் போட்டு தாளிக்கவும். கீரையைப் போட்டு 2 நிமிடம் வதக்கி மூடி போட்டு வேகவிடவும். பின் வாழைப்பூவை சேர்த்து வதக்கவும். தண்ணீர் தெளித்து மூடி 5 நிமிடம் வேக விடவும். பின் துவரம்பருப்பு, உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி இறக்கவும். சூடாக சாம்பார் சாதம்., வத்தக்குழம்பு சாதம்., புளிக்குழம்பு சாதத்தோடு பரிமாறவும்.

செவ்வாய், 8 ஜூலை, 2014

SNAKEGOURD RING BAJJI. புடலங்காய் ரிங் பஜ்ஜி.

SNAKEGOURD RING BAJJI. புடலங்காய் ரிங் பஜ்ஜி.

SNAKEGOURD RING BAJJI:-

NEEDED:-

SNAKEGOURD - 250 GMS

MTR BAJJI BONDA MIX - 1 CUP OR

(GRAM FLOUR - 1 CUP + RICE FLOUR - 2 TSP + CORN FLOUR - 2 TSP + RED CHILLI POWDER - 1/3 TSP + RED FOOD COLOUR - 1 PINCH + SALT - 1/2 TSP)

OIL - FOR FRYING.


METHOD :-

WASH THE SNAKEGOURD , REMOVE SEEDS AND SLICE THINLY AS ROUND RINGS. MIX THE MTR MIX OR THE OTHER INGREDIENTS WITH LITTLE WATER. HEAT OIL IN A PAN AND DEEP FRY. SERVE HOT AS EVENING SNACK. OR AS SIDE DISH FOR MIXED RICES.



P.N.

PREFER LONG AND SLEEK SNAKEGOURD.



புடலங்காய் ரிங் பஜ்ஜி:-

தேவையானவை:-

புடலங்காய் - 250 கிராம்

எம் டி ஆர் பஜ்ஜி போண்டா மிக்ஸ் - 1 கப் அல்லது

( கடலை மாவு - 1 கப் + அரிசி மாவு - 2 டீஸ்பூன் + சோளமாவு - 3 டீஸ்பூன் + மிளகாய்ப் பொடி - 1/3 டீஸ்பூன் + ரெட் ஃபுட் கலர் - 1 சிட்டிகை + உப்பு - 1/2 டீஸ்பூன்)

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.


செய்முறை:-

புடலங்காய்களைக் கழுவி விதை நீக்கி மெல்லிய வளையங்களாக நறுக்கவும். எம் டி ஆர் மிக்ஸ் அல்லது மற்ற பொடிகள் அனைத்தும் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து பிசறவும். பானில் எண்ணெயைக் காயவைத்து பொரித்து எடுக்கவும். சூடாக மாலை நேர ஸ்நாக்காக கொடுக்கலாம். அல்லது கலவை சாதங்களுக்கு தொட்டுக் கொள்ளலாம்.


குறிப்பு:-

நீண்ட ஒல்லியான புடலைகள் நன்கு நறுக்க வரும்.

வியாழன், 3 ஜூலை, 2014

உப்பும் சர்க்கரையும்.


 என் சமையலறையில் உப்பும் சர்க்கரையும்.:-

1. எந்த ஜூஸ் கலந்தாலும் இரண்டு ஸ்பூன் சர்க்கரையுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தினால் சுவை அதிகம்.

2. காரக்குழம்பு புளிக்குழம்பு வத்தக்குழம்பு வைக்கும்போது வறுக்கும் சமயம் ஒரு ஸ்பூன் சீனி சேர்த்து வறுத்து குழம்பு வைத்தால் ருசியும் கூட. குறைந்த அளவு எண்ணெய் போதும். எண்ணெயும் சீக்கிரம் பிரிந்து விடும்.

3. ஊறுகாய்களை வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை போட்டு ஃப்ரிஜ்ஜில் வைத்து உபயோகப்படுத்தினால் மிகக்குறைந்த அளவு  உப்பு போட்டாலே போதும். ( காய்கறிப் பொரியல்களுக்குப் போடுவது போல)

4. உப்பு அதிகமானால் ரத்தக் கொதிப்பு வரும்.  குறைவாக போட்டால் தசை இயக்கத்துக்கும் காரணம் அதுவே என்பதால் சோர்வை உண்டாக்கும். அளவான உப்பு வளம் சேர்க்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...