எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 23 மே, 2011

RADDISH PACHADI. முள்ளங்கிப் பச்சடி.



RADDISH PACHADI :-
NEEDED:-
RADDISH - 200 GMS
PARABOILED THUVAR DHALL - 1 CUP
BIG ONION - 1 NO (CHOPPED)
TOMATO - 1 NO (CHOPPED)
RED CHILLY POWDER - 1 TSP
DHANIYA POWDER - 2 TSP
TURMERIC POWDER - 1 PINCH
TAMARIND - 1 AMLA SIZE BALL
SALT - 1 TSP
OIL - 3 TSP
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
JEERA - 1/4 TSP
ASAFOETIDA - 1 /8 INCH PIECE.






METHOD:-
PEEL WASH AND CHOP THE RADDISH. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHALL. WHEN IT BECOMES BROWN ADD JEERA ANDASAFOETIDA. THEN ADD ONION., RADDISH SAUTE FOR 2 MINUTES THEN ADD TOMATO. SOAK TAMARIND IN 1 CUP OF WATER. TAKE THE PULP OUT OF IT AND ADD SALT., TURMERIC., CHILLI POWDER., CORRIANDER POWDER & POUR THIS IN TO THE VEGGIE. BRING TO BOIL AND KEEP IT IN SIM COVERED WITH A LID . COOK TILL RADISH IS TENDER ADD THE PARABOILED THUVAR DHALL. COOK FOR 5 MINUTES . STIRR WELL. SERVE OT WITH PLAIN RICE ., CURD RICE CHAPPATIS AND DOSAS.






முள்ளங்கிப் பச்சடி:-
தேவையானவை:-
முள்ளங்கி - 200 கிராம்
பதமாக வேகவைத்த துவரம்பருப்பு - 1 கப்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக அரியவும்)
தக்காளி - 1 ( பொடியாக அரியவும்)
மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன்
மல்லிப்பொடி - 2 டீஸ்பூன்
புளி - 1 நெல்லிக்காய் அளவு
உப்பு - 1 டீஸ்பூன்.
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
சீரகம்- 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டு.




செய்முறை:-
முள்ளங்கிகளைத் தோல் சீவிக் கழுவித் துண்டுகளாக்கவும். பானில் எண்ணெயை ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும். ஜீரகம்., பெருங்காயம் போடவும். வெங்காயம் முள்ளங்கி போட்டு 2 நிமிடம் வதக்க தக்காளி போடவும். புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து சாறு எடுத்து உப்பு., மஞ்சள்தூள்., மிளகாய்த்தூள்., மல்லித்தூள் போடவும். இந்தக் கலவையை காயில் கொட்டி கொதிவந்ததும் சிம்மில் வைத்து மூடி போட்டு முள்ளங்கி மென்மையாகும்வரை வேகவிடவும். பருப்பை சேர்த்து நன்கு கிளறி 5 நிமிடம் கழித்து இறக்கவும். சூடாக சாதம்., தயிர் சாதம்., சப்பாத்தி., தோசையுடன் பரிமாறவும்.

புதன், 18 மே, 2011

KUMMAAYAM.. கும்மாயம்/ஆடிக்கூழ்.

KUMMAAYAM:-

NEEDED:-

KUMMAAYAM FLOUR( 1CUP RAW RICE., 1 CUP MOONG DHAL., 1 CUP ORID DHAL - FRY THEM WITHOUT OIL AND POWDER , SIFT THEM . ) FROM THIS FLOUR TAKE ONLY 1 CUP - 1 CUP..200GMS

JAGGERY ( VELLAM +PANAIVELLAM) - 1 1/2 CUP 200GMS

GHEE+ SEASOME OIL - 100+50 GMS.

WATER - 4 CUPS.


METHOD:-

HEAT 50 GMS SEASOME OIL WITH 50 GMS GHEE IN A KADAI. FRY THE FLOUR FOR A MINUTE, KEEP ASIDE. ADD JAGGERY IN 4 CUPS OF WATER AND HEAT THE PAN TILL ALL THE JAGGERY MELTS. STIR OCCASIONALLY. REMOVE FROM FIRE AND STRAIN THE JAGGERY WATER IN THE FLOUR AND MIX THEM WITHOUT FORMING LUMPS. PLACE THE PAN IN THE STOVE AND STIR WELL. COOK TILL IT IS NOT STICKS TO HAND . WHEN IT BECOMES GLASSY ADD THE REST OF THE GHEE AND SERVE HOT.



ITS A SPECIAL ITEM OF CHETTINADU AND WE SERVED IT IN OUR MARRIAGES AT THE END OF THE FUNCTION.


THIS IS MY 100 THS POST..:))


கும்மாயம்/ஆடிக்கூழ்:-

தேவையானவை:-

கும்மாய மாவு( பச்சரிசி 1 கப்., பாசிப்பருப்பு 1 கப்., வெள்ளை உளுந்து 1 கப்பை வெறும் வாணலியில் வெதுப்பி பொடித்து சலிக்கவும்.) இதிலிருந்து ஒரு கப் மட்டும் எடுத்துக் கொள்ளவும். - 1கப் 200 கி்ராம்.

கருப்பட்டி + வெல்லம் = 1 1/2 கப் 200 கிராம்

நெய்+நல்லெண்ணெய் = 100+50 கிராம்.

தண்ணீர் - 4 கப்


செய்முறை:-

பானில் நல்லெண்ணெய் 50 கிராம்., நெய் 50 கிராம் ஊற்றி மாவை ஒரு நிமிடம் வாசனை வரும்வரை வறுக்கவும். இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் 4 கப் ஊற்றி வெல்லம்., கருப்பட்டியை போட்டு அடுப்பில் வைக்கவும். கரைந்தவுடன் வடிகட்டி மாவில் ஊற்றி கட்டிகளில்லாமல் கரைக்கவும். பின் அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும். கையில் ஒட்டாமல் கெட்டியாக கண்ணாடியைப் போல வரும்வரை கிளறி மிச்ச நெய்யைஊற்றி இறக்கவும். சுடச் சுட பரிமாறவும்.


இது செட்டிநாடு ஸ்பெஷல் ஐட்டம். திருமணம் அல்லது விஷேஷம் முடிந்தவுடன் மாலைப்பலகாரத்தில் பரிமாறுவார்கள். சொல்லிக்கிற பலகாரம் என்று இதற்குப் பேர்..:)


இது எனது 100வது பதிவு..:))

செவ்வாய், 17 மே, 2011

SCRAMBLED EGGS.. முட்டைப் பொரியல்.

SCRAMBLED EGGS:-

NEEDED:-

EGGS - 4 NOS

MILK - 1 TBLSPN

BIG ONION - 1 LARGE CHOPPED

GREEN CHILLIES - 1 CHIPPED

PEPPER JEEERA POWDER - 1 TSP

SALT - 1/2 TSP

OIL - 3 TSP

MUSTARD - 1 TSP

ORID DHAL - 1 TSP


METHOD:-

TAKE THE EGGS IN A BOWL WITH SALT., PEPPER JEERA POWDER. BEAT WELL TILL FLUFFY.. HEAT OIL IN A PAN ADD MUSTARD . WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN ADD ONION AND CHILLY. SAUTE WELL. POUR THE BEATEN EGG. STIRR WELL. COOK FOR FIVE MINUTES AND SERVE HOT WITH SAMBAR RICE., VATHAKKUZAMBU RICE. YUMMY ITS TASTY..:)


தேவையானவை :-

முட்டை - 4

பால் - 1 டேபிள்ஸ்பூன்

பெரிய வெங்காயம் - 1 பெரிது பொடியாக நறுக்கவும்.

பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கவும்.

மிளகுசீரகத்தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - 1/2 டீஸ்பூன்

எண்ணெய் - 3 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்


செய்முறை:-

முட்டைகளை ஒரு பௌலில் உடைத்து ஊற்றிப் பால்., உப்பு., மிளகுத்தூள் போட்டு நன்கு நுரை வரும்வரை அடிக்கவும். பானில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் வெங்காயம் பச்சைமிளகாய் போட்டு நன்கு வதக்கவும். அடித்த முட்டைக்கலவையை ஊற்றி உதிராக வரும்வரை கிளறவும். சூடாக சாம்பார் சாதம்., வத்தக்குழம்பு சாதத்துடன் பரிமாறவும்.

திங்கள், 16 மே, 2011

CAULIFLOWER CHOPS. காலிஃப்ளவர் சாப்ஸ்.

CAULIFLOWER CHOPS:-

NEEDED:-

CAULIFLOWER - 1 (MAKES INTO 20 PIECES)

GINGER GARLIC PASTE - 1TSP

RED CHILLY POWDER - 1 TSP

SALT - 1/2 TSP

WHITE FLOUR- 1 TSP

CORN FLOUR - 1 TBLSPN

RED FOOD COLOUR - 1 PINCH OPTIONAL.

OIL - 200 GMS FOR FRYING


METHOD:-

WASH THE CAULIFLOWER., ADD GINGER GARLIC PASTE ., SALT AND CHILLY POWDER. PLACE IT IN A KADAI COVERED WITH LID AND PARA BOILTHAM WITH LITTLE WATER. REMOVE FROM FIRE. MAKE A BATTER WITH WHITE FLOUR., CORN FLOUR ONE PINCH SALT ., CHILLY POWDER AND RED FOOD COLOUR. DIP THE CAULIFLOWER PIECES IN IT AND DEEP FRY. SERVE HOT WITH SAUCES AND CHIPS AS EVENING SNACKS. OR SERVE IT WITH PULAO., FRIED RICES AND BIRIYANIS.


காலிஃப்ளவர் சாப்ஸ்:-

தேவையானவை:-

காலிஃப்ளவர் - 1 (20 பூக்களாக நறுக்கவும்)

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

வரமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - 1/2 டீஸ்பூன்

மைதா - 1 டீஸ்பூன்

சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்

ரெட்ஃபுட் கலர் - 1 சிட்டிகை ( விரும்பினால்)

எண்ணெய் - 20 கிராம் பொறிக்க.


செய்முறை:-

காலிஃப்ளவரை சுத்தம் செய்து இஞ்சி பூண்டு பேஸ்ட்., மிளகாய்த்தூள்., உப்பு சிறிது தண்ணீருடன் கலந்து குலுக்கி மூடி போட்டு ஒரு கடாயில் சிம்மில் வேகவிடவும். அரை வேக்காடு வெந்தவுடன் இறக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து மைதா., சோளமாவு., உப்பு., மிளகாய்த்தூள்., ரெட்ஃபுட்கலர் சேர்த்துக் கரைக்கவும். இந்த காலிஃப்ளவர்களை அதில் நனைத்து எண்ணெயில் பொறித்தெடுக்கவும். இதை சாஸ் சிப்ஸுகளுடன் மாலையில் பரிமாறலாம். அல்லது புலவு., ஃப்ரைட் ரைஸ்., பிரியாணியுடன் பரிமாறலாம்.

சனி, 14 மே, 2011

KATHAMBACH CHUTNEY. கதம்பச் சட்னி



KATHAMBACH CHUTNEY:-
NEEDED:-
GRATED COCONUT - 4 TBLSPN
RED CHILLIES - 2 NOS
GREEN CHILLIES - 3 NOS
BIG ONION- 1 NO. CHOPPED
GARLIC - 2 POD
GINGER - 1/4 INCH PIECE
TOMATO - 1 NO
CURRY LEAVES - 4 ARK
CORRIANDER LEAVES - ONE HANDFUL
MINT LEAVES - ONEHANDFUL
TAMARIND - 1 POD
SALT - 1/2 TSP
OIL - 3 TSP
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
CHANNA DHAL - 1 TSP
ASAFOETIDA - 1/8 INCH PIECE
FENUGREEK- 1/4 TSP


METHOD:-
HEAT OIL IN A PAN. ADD MUSTARD., WHEN IT SPLUTTERS ADD ORID DHAL., CHANNA DHAL., FENUGREEK., ASAFOETIDA. WHEN THE DHALS BECOMES BROWN ADD RED CHILLIES, HALVED GREEN CHILLIES., ONION., SAUTE WELL. ADD TOMATO ., GINGER., GARLIC., CURRY LEAVES., MINT LEAVES., CORRIANDER LEAVES., THEN SALT AND TAMARIND WITH GRATED COCONUT. SAUTE FOR A WHILE . REMOVE FROM HEAT . KEEP ASIDE FOR COOL. AFTER COOLING GRIND IT WELL. ADD WATER FOR THE NEEDED CONSISTENCY. SERVE IT WITH IDDLIES., DOSAS ., MASALACHEEYAM., VELLAIP PANIYAARAM., VADAI., OR WITH RICE AND GHEE., AND WITH CURD RICE AS THEENGKAAY SAMBANTHI.

NOTE:- THIS IS CHETTINAD BASED RECIPE.

கதம்பச் சட்னி:-
தேவையானவை:-
துருவிய தேங்காய் - 4 டேபிள்ஸ்பூன்
வரமி்ளகாய் - 2
பச்சைமிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது.
தக்காளி - 1
இஞ்சி - 1/4 இஞ்ச் துண்டு
பூண்டு - 2 பல்
கருவேப்பிலை - 4 இணுக்கு்
கொத்துமல்லி - ஒரு கைப்பிடி
புதினா - ஒரு கைப்பிடி
புளி - 1 சுளை
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டு
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்.

செய்முறை:-
பானில் எண்ணெய் ஊற்றி கடுகு போடவும். வெடித்தவுடன் உளுந்து., கடலைப்பருப்பு போடவும் . இவை சிவந்தவுடன் பெருங்காயம்., வெந்தயம்., வரமிளகாய்., கீறிய பச்சைமிளகாய் ., வெங்காயம் போட்டு வதக்கவும். பின் தக்காளி., இஞ்சி., பூண்டு., கருவேப்பிலை., கொத்துமல்லி., புதினா., உப்பு., புளி., தேங்காய் போட்டு இரண்டு தரம் கிளறி இறக்கவும். ஆறவைத்து அரைத்துத் தேவையான தண்ணீர் சேர்க்கவும். இட்லி., தோசை., மசாலச்சீயம்., வெள்ளைப்பணியாரம்., வடையுடன் பரிமாறவும். அல்லது சாதம் நெய்போட்டு சட்னி போட்டு சாப்பிடலாம். தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ள ஏற்றது.

டிஸ்கி :- இது செட்டிநாட்டு வைபவங்களில் கட்டாயம் இடம்பெறும்.

வியாழன், 5 மே, 2011

SNAKE GOURD THUVATTAL. புடலங்காய்த் துவட்டல்.

SNAKE GOURD THUATTAL:-

NEEDED:-

SNAKE GOURD - 250 GMS (MEDIUM SIZE)

PARA BOILED THUVAR DHAL/MOONG DHAL - 1/2 CUP

GRATED COCONUT - 2 TSP ( OPTIONAL)

OIL - 2 TSP

MUSTARD - 1 TSP

ORID DHAL - 1

RED CHILLY - 2 NOS HALVED .,UNSEEDED

CURRY LEAVES- 1 ARK

SALT - 1/3 TSP.


METHOD :-

WASH CUT UNSEED AND CHOP THE SNAKE GOURD. HEAT OIL IN A PAN ADD MUSTARD, WHEN IT SPLUTTERS ADD ORID DHAL, HALVED CHILLIES., CURRY LEAVES., THEN CHOPPED SNAKE GOURD. SPRAY SOME WATER . SAUTEWELL SIMMER THE STOVE AND COVERED IT WITH A LID . AFTER 5 MINUTES STIRR WELL ADD THE PARA BOILED THUVAR DHAL AND SALT. STIRR WELL AND COVER . COOK FOR 3 MINUTES . REMOVE FROM FIRE AND ADD THE GRATED COCONUT AND SERVE HOT WITH SAMBAR RICE OR VATHAKKUZAMBU RICE OR PUZIK KUZAMBU RICE. YAMMY.. YOU WILL ASK FOR MORE..:)



புடலங்காய் துவட்டல்:-

தேவையானவை:-

புடலங்காய் - 250 கிராம் (மீடியம் சைஸ்)

பதமாக வெந்த துவரம் பருப்பு/பாசிப் பருப்பு - 1/2 கப்

துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன் ( விரும்பினால்)

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்து - 1 டீஸ்பூன்

வரமிளகாய் - 2 ரெண்டாக கிள்ளி விதையை உதிர்க்கவும்.

கருவேப்பிலை - 1 இணுக்கு

உப்பு - 1/3 டீஸ்பூன்.


செய்முறை:-

புடலங்காயைக் கழுவி இரண்டாக வெட்டி விதையை நீக்கி சின்னதாக அரியவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் கருவேப்பிலை., வரமிளகாய்., புடலைங்காய் போட்டு ஒரு கைப்பிடி தண்ணீர் தெளித்து கிளறி சிம்மில் வைத்து ஒரு மூடி போட்டு மூடவும். 5 நிமிடம் வெந்தவுடன் திறந்து பருப்பை சேர்த்து., உப்பு போடவும். பின் கிளறி மூடி 3 நிமிடம் வெந்தவுடன் இறக்கவும். அதன்பின் தேங்காய்த்துருவல் போட்டு கிளறி சாம்பார் சாதம்., புளிக்குழம்பு சாதம்., வத்தக்குழம்பு சாதத்துக்கு தொட்டுக் கொள்ளப் பரிமாறவும். இது டேஸ்டாக இருப்பதால் இன்னும் இன்னும் என கேட்டு வாங்கிச் சாப்பிடுவீர்கள்..:)


Related Posts Plugin for WordPress, Blogger...