எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 31 மே, 2017

19. பாதாம் பழப் பாயாசம் :- FRUITS BADAM GHEER,

19. பாதாம் பழப் பாயாசம் :-

தேவையானவை:- பாதாம் – 20, பால் – அரை லிட்டர், சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன். பழக்கலவை – ஆப்பிள், பைனாப்பிள், சப்போட்டா, வாழைப்பழம் – அரை கப், நெய்- அரை டீஸ்பூன்.

செய்முறை:- பாதாமை ஊறவைத்துத் தோலுரித்து அரைத்துப் பாலில் போட்டு நன்கு கொதிக்கவிடவும். சர்க்கரை சேர்த்துக் கரைந்ததும் இறக்கி ஆறவிடவும். இதில் பழக்கலவையை நெய்யில் வதக்கிப் போட்டுக் குளிரவைத்துப் பரிமாறவும்.

திங்கள், 29 மே, 2017

18. பப்பாளி வத்தல் குழம்பு :- PAPAYA GRAVY

18. பப்பாளி வத்தல் குழம்பு :-

தேவையானவை:- பப்பாளி – 15 துண்டுகள், சின்னவெங்காயம், பூண்டு – தலா – 10.  தக்காளி – 1, புளி – எலுமிச்சை அளவு, உப்பு – 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், மல்லித்தூள் – 4 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,  தாளிக்க :- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம் – தலா அரை டீஸ்பூன். கட்டி பெருங்காயம் – 1 துண்டு.

செய்முறை:- புளியை ஊறவைத்து உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் போட்டு வைக்கவும். வெங்காயம் பூண்டைத் தோலுரித்து நறுக்கவும். தக்காளியைத் துண்டுகளாக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம், பெருங்காயம் தாளித்து வெங்காயம் தக்காளி பூண்டைப் போட்டு வதக்கவும். நன்கு சுருள வதங்கியதும் கரைத்த புளித்தண்ணீரை ஊற்றவும். கொதித்து சுண்டி வரும்போது பப்பாளித் துண்டுகளைப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும். 

ஞாயிறு, 28 மே, 2017

17. தேன்கதலி அப்பம்:- THENKATHALI APPAM

17. தேன்கதலி அப்பம்:-

தேவையானவை:- தேன்கதலிப் பழம் – 2, மைதா/கோதுமை – ஒரு கப், சர்க்கரை – கால் கப், உப்பு – 1 சிட்டிகை, பேக்கிங் பவுடர் – 1 சிட்டிகை, ஏலத்தூள் – 1 சிட்டிகை. எண்ணெய் – பொரிக்கத்தேவையான அளவு.

செய்முறை:- நன்கு கனிந்த தேன்கதலிப் பழங்களை உரித்து ஒரு பௌலில் போட்டு நன்கு மசிக்கவும். இதில் மைதா, உப்பு, பேக்கிங் பவுடர், ஏலத்தூள்,சர்க்கரை போட்டு நன்கு கலந்து தண்ணீரை சிறிது சிறிதாகத் தெளித்து நன்கு பிசையவும். பஜ்ஜி மாவு பதத்திற்கு வந்ததும் தண்ணீர் சேர்க்க வேண்டாம். இதைப் பத்து நிமிடம் ஊறவைத்து கடாயில் எண்ணெயைக் காயவைத்து ஒவ்வொன்றாக ஊற்றவும், உப்பியதும் திருப்பி வேகவைத்துப் பொன்னிறமாக எடுக்கவும்.

வெள்ளி, 26 மே, 2017

16. தக்காளிப்பழ ஊத்தப்பம் :- TOMATO OOTHAPPAM

16. தக்காளிப்பழ ஊத்தப்பம் :-

தேவையானவை:- தோசை மாவு – 2 கரண்டி, தக்காளிப்பழம் – 2, மிளகு சீரகத்தூள் – 1 டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:- தக்காளிப்பழத் துண்டுகளை வட்ட வட்டமாக நறுக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து ஒரு கரண்டி மாவை ஊத்தப்பமாக ஊற்றி தக்காளிப்பழத் துண்டுகளைப் பரப்பவும். இதில் உப்பு, மிளகு சீரகத்தூள் தூவி சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி போட்டு வேகவிடவும். நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டுப் பொன்னிறமானதும் எடுத்து சட்னிகளுடன் பரிமாறவும்.

புதன், 24 மே, 2017

15. செவ்வாழைப்பழ புட்டிங் :- RED PLANTAIN PUDDING.

15. செவ்வாழைப்பழ புட்டிங் :-

தேவையானவை:- செவ்வாழைப்பழம் – 1. தேங்காய்த்துருவல் – கால் கப்,  தேன் – 2 ஸ்பூன், ஏலப்பொடி – கால் டீஸ்பூன்.

செய்முறை:- செவ்வாழைப்பழத்தைத் தோலுரித்து வட்டத் துண்டுகளாக்கவும். இதில் தேங்காய்த்துருவலை வைத்துத் தேன் ஊற்றி ஏலப்பொடி தூவிப் பரிமாறவும்.

செவ்வாய், 23 மே, 2017

14. சிவப்பரிசி அவல் ஃப்ரூட் சாலட் :- REDRICE FLAKES FRUIT SALAD

14. சிவப்பரிசி அவல் ஃப்ரூட் சாலட் :-


தேவையானவை:- சிவப்பரிசி அவல் – 1 கப், வால்பேரிக்காய் – பாதி, வாழைப்பழம் – சின்னம் ஒன்று, ஆப்பிள் – பாதி, பச்சை திராட்சை, கறுப்பு திராட்சை, செம்மாதுளை முத்துக்கள் – தலா ஒரு கைப்பிடி, தேன், 1 டேபிள் ஸ்பூன், நாட்டுச் சர்க்கரை – 2 டீஸ்பூன்.

செய்முறை:- சிவப்பரிசி அவலைக் களைந்து பத்துநிமிடம் ஊறவிடவும். வால்பேரிக்காய், வாழைப்பழம், ஆப்பிள் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கவும். இதை அவலில் சேர்த்து பச்சை திராட்சை, கறுப்புதிராட்சை, செம்மாதுளை முத்துக்களைப் போட்டு தேனும் நாட்டுச் சர்க்கரையும் சேர்த்து நன்கு கலந்து கொடுக்கவும்.

 

ஞாயிறு, 21 மே, 2017

13. ஓட்ஸ் கிஸ்மிஸ் ரொட்டி :- OATS KISMIS ROTI

13. ஓட்ஸ் கிஸ்மிஸ் ரொட்டி :-


தேவையானவை:- மசாலா ஓட்ஸ் -  1 கப், ஆட்டா – அரை கப், கிஸ்மிஸ் – 20, நெய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- மசாலா ஓட்ஸில் உப்பு இருப்பதால் உப்பு சேர்க்க வேண்டாம். அதில் ஆட்டா, கிஸ்மிஸைப் போட்டு தண்ணீர் தெளித்து நன்கு பிசையவும். பத்து நிமிடம் ஊறியதும். தவாவில் நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

வெள்ளி, 19 மே, 2017

12. எலுமிச்சம்பழ பானகம் :- LEMON PANAGAM.

12. எலுமிச்சம்பழ பானகம் :-


தேவையானவை:- எலுமிச்சம்பழம் – 1, வெல்லம் – இரண்டு அச்சு. சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் – தலா கால் டீஸ்பூன்.

செய்முறை:- எலுமிச்சம்பழத்தை சாறு எடுத்து வைக்கவும். வெல்லத்தை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி ஆறவிடவும். இதில் சுக்குத்தூள், ஏலத்தூள் சேர்த்து ஆறியதும் எலுமிச்சை சாறு சேர்த்துக் கலக்கிப் பருகக் கொடுக்கவும். 

வியாழன், 18 மே, 2017

11. ஈவ்ஸ் சாலட் :- EVES SALAD

11. ஈவ்ஸ் சாலட் :-


தேவையானவை:- ஆப்பிள் – 1, வாழைப்பழம் – சிறியது 1, பைனாப்பிள் – 1 துண்டு, கறுப்பு திராட்சை – ஒரு கைப்பிடி, எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன். ட்ரெஸ்ஸிங் செய்ய :- சோர் க்ரீம் ( பாலேடு ) , அலங்கரிக்க :- வால்நட்/அக்ரூட் – 12. ஆரஞ்சு – 1 இரண்டாக வெட்டவும்.

செய்முறை:- ஆப்பிள், வாழைப்பழம், பைனாப்பிள் ஆகியவற்றைச் சதுரத் துண்டுகள் செய்து கறுப்புத் திராட்சை சேர்த்து எலுமிச்சை சாறு போட்டுப் புரட்டி வைக்கவும். இதில் புளித்த பாலேட்டை நன்கு அடித்து ஊற்றவும். அக்ரூட், இரண்டாக வெட்டிய ஆரஞ்சு சேர்த்து அலங்கரித்துக் குளிர வைத்துப் பரிமாறவும்.

புதன், 17 மே, 2017

10. இமாம்பசந்த் மாம்பழ சாம்பார் :- IMAM PASANTH MAMBAZHA SAMBAR

10. இமாம்பசந்த் மாம்பழ சாம்பார் :-

தேவையானவை:- இமாம்பசந்த் மாம்பழம் -1 துவரம் பருப்பு – அரை கப், சாம்பார் பொடி – 1 டேபிள் ஸ்பூன், புளி – நெல்லி அளவு, உப்பு – ஒரு டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 8, தக்காளி – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு, தாளிக்க :- எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து, சீரகம் – தலா அரை டீஸ்பூன், பெருங்காயப் பொடி -1 சிட்டிகை.

செய்முறை:- துவரம்பருப்பை நன்கு வேகவிடவும். வெந்ததும் இதில் தோலுரித்து நறுக்கிய சின்ன வெங்காயம் தக்காளி, தோலோடு நான்காக வெட்டிய மாம்பழத்தைப் போட்டு வேகவிடவும். கொட்டையையும் போடலாம். இதில் உப்பு புளியைக் கரைத்து ஊற்றி சாம்பார் பொடி போட்டு வெந்ததும் இறக்கி எண்ணெயில் கடுகு, உளுந்து, சீரகம், பெருங்காயப்பொடி தாளித்துச் சேர்க்கவும்.

செவ்வாய், 16 மே, 2017

9. ஆப்பிள் மோர்க்குழம்பு :- APPLE MORKUZHAMBU

9. ஆப்பிள் மோர்க்குழம்பு :-

தேவையானவை:- சிம்லா ஆப்பிள் – 1, தயிர் – 1 கப், தேங்காய் – அரை மூடி, பச்சை மிளகாய் – 3, சீரகம் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை. உப்பு – ஒரு டீஸ்பூன். தாளிக்க:- தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், சீரகம், வெந்தயம் – தலா கால் டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு. வரமிளகாய் – 1

செய்முறை:- ஆப்பிளைத் தோல் சீவி மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நீர் ஊற்றி வேகவிடவும். இதில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை அரைத்து ஊற்றவும். லேசாகக் கொதித்ததும் தயிரை நன்கு கடைந்து ஊற்றி நுரைக்கும்போது உப்பு சேர்த்து இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, சீரகம், வெந்தயம், கருவேப்பிலை, இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய் தாளித்து மோர்க்குழம்பில் சேர்க்கவும்.

திங்கள், 15 மே, 2017

8. பைனாப்பிள் ரெய்த்தா :- PINEAPPLE RAITHA

8. பைனாப்பிள் ரெய்த்தா :-


தேவையானவை:- பைனாப்பிள் – 1 துண்டு. தயிர் – 1 கப், உப்பு – ஒரு சிட்டிகை, சீரகத்தூள் – 1 சிட்டிகை.

செய்முறை. :- பைனாப்பிளை சிறு துண்டுகள் செய்யவும். தயிரை நீர் இல்லாமல் காட்டன் துணியில் வடிகட்டி கெட்டியான தயிரை உப்பு சேர்த்து நன்கு அடிக்கவும். இதில் பைனாப்பிள் துண்டுகளையும் சீரகப் பொடியையும் சேர்த்துக் கலக்கி உபயோகிக்கவும். 

7. ஃப்ரூட் சாட் :- FRUIT CHAT

7. ஃப்ரூட் சாட் :-


தேவையானவை:- வாழைப்பழம் – 1, ஆப்பிள் – 1, பைனாப்பிள் – 1 துண்டு, பப்பாளி – 1துண்டு, தர்ப்பூசணி – 1 துண்டு, மஞ்சள் கிர்ணி – 1துண்டு. சாட் மசாலா.
செய்முறை:- பழங்களைத் தோல் சீவிக் கழுவிப் பெரிய சதுரத் துண்டுகளாக்கவும். இதை சர்விங் கப்பில் போட்டு சாட் மசாலா தூவி ஸ்டிக் குத்திக் கொடுக்கவும்.

வெள்ளி, 12 மே, 2017

6. மிக்ஸட் ஃப்ரூட் கஸ்டர்ட், MIXED FRUIT CUSTARD.

6. மிக்ஸட் ஃப்ரூட் கஸ்டர்ட்


தேவையானவை:- மாம்பழம் – 1, ஆப்பிள் – 1, வாழைப்பழம் – 1, பைனாப்பிள் – 1 துண்டு, கிவி – 1, சாத்துக்குடி – 1, ஆரஞ்சு – 1, பச்சை திராட்சை, கறுப்பு திராட்சை, மாதுளை முத்துக்கள் – தலா ஒரு கைப்பிடி. பால் – ஒன்றரை கப், கஸ்டர்ட் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன், சீனி – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- பழங்களைக் கழுவித் தோலுரித்து சதுரத் துண்டுகள் செய்யவும். பாலில் சிறிது கஸ்டர்ட் பவுடரைக் கரைத்து வைக்கவும். மிச்ச பாலைக் காய்ச்சி சீனி சேர்த்துக் கரைந்ததும் கஸ்டர்ட் கரைத்த பாலை ஊற்றவும். இரண்டு நிமிடங்கள் தொடர்ந்து கிளறி கொதித்துக் கண்ணாடியானதும் இறக்கி நன்கு ஆறவிடவும். இதில் பழங்களைக் கலந்து குளிரவைத்துப் பரிமாறவும்.

புதன், 10 மே, 2017

5. ரவா ஃப்ரூட் கேசரி :- SOOJI FRUIT KESARI.

5. ரவா ஃப்ரூட் கேசரி :-
 
தேவையானவை:- பழக் கலவை ( சதுரமாக வெட்டிய ஆப்பிள், பைனாப்பிள், வாழைப்பழம், பச்சை திராட்சை, கறுப்பு திராட்சை ) – 1 கப், வெள்ளை ரவை – 1 கப், சர்க்கரை – 1 கப், நெய் – அரை கப், ஏலத்தூள் – 1 சிட்டிகை. முந்திரி கிஸ்மிஸ் – தலா 6.

செய்முறை:- நெய்யைக் காயவைத்து முந்திரி கிஸ்மிஸை வறுத்து பழங்களைப் போட்டுப் புரட்டி எடுத்து ஏலத்தூள் தூவி வைக்கவும். மிச்ச நெய்யில் ரவையைப் பொன்னிறமாக வறுத்து இரண்டு கப் கொதிநீர் ஊற்றி வேகவிடவும். வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கரைந்து இறுகியதும் ஏலத்தூளில் புரட்டிய முந்திரி, கிஸ்மிஸ், பழங்களைப் போட்டுக் கலக்கி இறக்கவும்.

செவ்வாய், 9 மே, 2017

4. ஆரஞ்சு பாசுமதி ரைஸ் :- ORANGE BASMATI RICE.

4. ஆரஞ்சு பாசுமதி ரைஸ் :-
 

தேவையானவை :-
பாசுமதி/பச்சரிசி – 1 கப், ஆரஞ்சு – 4 சுளை உதிர்த்தது., ஆரஞ்சுச்சாறு – 1 கப்
, தண்ணீர் – 1 கப், உப்பு – ¼ டீஸ்பூன், ஜீனி – 1 சிட்டிகை., நெய்/வெண்ணெய் – 2 டீஸ்பூன்
, முந்திரி, கிஸ்மிஸ் – தலா 6.

செய்முறை:-

அரிசியைக் களைந்து நீரை இறுத்து வைக்கவும். பானில் நெய் அல்லது வெண்ணையைக் காயவைத்து அரிசியை வறுக்கவும். இரண்டு நிமிடங்கள் நிதானமாய தீயில் வறுத்தபின் உப்பு சீனி தண்ணீர், ஆரஞ்சுச்சாறு சேர்த்து ஒரு விசில் வரும் வரை வைக்கவும். ஆறியதும் திறந்து ஆரஞ்சு சுளைகள் சேர்த்து முந்திரி கிஸ்மிஸை நெய்யில் வறுத்துத் தூவி பைனாப்பிள் ரெய்த்தா அல்லது பூந்தி ரெய்த்தாவுடன் பரிமாறவும்.

திங்கள், 8 மே, 2017

3.அம்ருத்/பெரு/கொய்யாப்பழ சப்ஜி:- AMRUD KI SABZI

3.அம்ருத்/பெரு/கொய்யாப்பழ சப்ஜி:- 


தேவையானவை :- கொய்யாப்பழம் – 2, தக்காளி – 1, எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை, மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், மல்லித்தூள் – 1 டீஸ்பூன், சீரகத்தூள் – அரை டீஸ்பூன், ஆம்சூர்/மாங்காய்ப்பொடி – அரை டீஸ்பூன், சீனி – ஒரு சிட்டிகை, உப்பு – கால் டீஸ்பூன், கொத்துமல்லித்தழை – சிறிது.

செய்முறை:- கொய்யாப்பழத்தை நான்காக வெட்டி நடுப்பகுதியில் கொட்டை உள்ள சதையை மட்டும் வழித்தெடுத்துவிட்டுத் துண்டுகள் செய்யவும். கொட்டை உள்ள சதைப்பகுதியை அரைத்து வடிகட்டவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் பெருங்காயப்பொடி, மஞ்சள் பொடி போட்டு அதில் துண்டுகளாக வெட்டிய கொய்யா தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும். இதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், ஆம்சூர் பொடி, சீனி, உப்பு சேர்த்து நன்கு கலக்கி கால் கப் தண்ணீர் விட்டு நன்கு மூடி சிம்மில் வேகவிடவும். நான்கு நிமிடம் கழித்து இறக்கி கொத்துமல்லி தூவிப் பரிமாறவும்.

ஞாயிறு, 7 மே, 2017

2.ப்ளூ பெர்ரி/நாவல்பழ பான் கேக்:- BLUE BERRY PANCAKE.

2.ப்ளூ பெர்ரி/நாவல்பழ பான் கேக்:-


தேவையானவை:- மைதா – 1 கப், சீனி – 2 டேபிள் ஸ்பூன், பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன், உப்பு – ½ டீஸ்பூன், பால் – முக்கால் கப், வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், நாவல்பழம் & விதையில்லா கறுப்பு திராட்சை – தலா 20. தேன் – ஒருடேபிள் ஸ்பூன் - பரிமாற. 

செய்முறை:- நாவல்பழம் & விதையில்லா கறுப்பு திராட்சையை லேசாக சூடாக்கி வைக்கவும். ஒரு பௌலில் மைதா சீனி, உப்பு, பேக்கிங் பவுடர் போட்டு நன்கு கலக்கவும். பாலில் உருகிய வெண்ணெயைக் கலந்து மாவில் ஊற்றிக் கட்டிகள் இல்லாமல் கலக்கவும். நாவல் பழம் & விதையில்லா கறுப்பு திராட்சை போட்டுப் பத்து நிமிடம் ஊறியதும் எண்ணெய் தடவிய தவாவில் ஒரு கரண்டி மாவை ஊற்றி வேகவிடவும். வெந்ததும் திருப்பிப் போட்டு வெந்ததும் எடுத்து தேன் ஊற்றிப் பரிமாறவும்.


வியாழன், 4 மே, 2017

1.தர்பூசணி தேங்காய் ஜூஸ். WATERMELON COCONUT JUICE.

1.தர்பூசணி தேங்காய் ஜூஸ்

தேவையானவை :- தர்ப்பூசணி – ஒரு துண்டு, தேங்காய்ப்பால் – ஒரு டேபிள் ஸ்பூன், சர்க்கரை – 2 டீஸ்பூன். 

செய்முறை:- தர்பூசணியைத் தோல் சீவி சீனி சேர்த்து அரைத்து ஜூஸ் தயாரிக்கவும். இதில் தேங்காய்ப்பால் ஊற்றி இன்னும் ஒரு முறை மிக்ஸியில் ப்ளெண்ட் செய்து கண்ணாடிக் குவளைகளில் ஊற்றி சர்வ் செய்யவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...