எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 27 டிசம்பர், 2011

AUBERGINE CURRY. எண்ணெய்க் கத்திரிக்காய் கறி.


AUBERGINE CURRY:-
NEEDED:-
AUBERGINE - 250 GMS
RED CHILLY POWDER - 2 TSP
SALT - 1/2 TSP
OIL - 1 TABLESPN
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
FENNEL - 1/3 TSP

METHOD:-
WASH AND CUT THE AUBERGINES IN LENGTHWISE. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL AND FENNEL. THEN ADD THE AUBERGINES AND SAUTE WELL. ADD THE SALT AND CHILLY POWDER. STIRR OCCASIONALLY. KEEP THE STOVE IN SIM AND COVER THE PAN WITH A LID. COOK TILL OIL SEPERATES AT THE SIDES. SERVE HOT WITH SAMBAR RICE /CURD RICE.


எண்ணெய்க் கத்திரிக்காய்க் கறி:-
தேவையானவை:-
கத்திரிக்காய் - 250 கி
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - 1/3 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/3 டீஸ்பூன்

செய்முறை:-
கத்திரிக்காய்களை நீளவாக்கில் அரிந்து தண்ணீரில் கழுவவும். பானில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, சோம்பு போட்டு வெடித்தவுடன் கத்திரிக்காய்களைச் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் மிளகாய்ப் பொடி, உப்பு போட்டு நன்கு கிளறி ஒரு மூடி போட்டு மூடி அடுப்பை சிம்மில் வைக்கவும். அவ்வப்போது திருப்பி விடவும். ஓரங்களில் எண்ணெய் பிரிந்ததும் இறக்கி சாம்பார் சாதம்/தயிர்சாதத்துடன் பரிமாறவும்.

புதன், 7 டிசம்பர், 2011

CAULIFLOWER SOUP. காலிஃப்ளவர் சூப்.

CAULIFLOWER SOUP:-
NEEDED:-

CAULIFLOWER - 10 FLORETS

BOILED THUVAR THAL - 1 TBLSPN

BIG ONION - 1 NO CHOPPED

TOMATO - 1 NO CHOPPED.

GREEN CHILLY - 1 NO SLIT OPEN

TURMERIC POWDER - 1 PINCH.

OIL OR GHEE - 2 TSP

ORID DHAL - 1/2 TSP

FENNEL - 1/3 TSP

JEERA - 1/2 TSP

PEPPER - 1 TSP

BAY LEAF - 1 INCH

CINNAMON - 1 INCH

KALPASIPPUU - 1 INCH

CARDAMOM - 1 NO

CURRY LEAVES - ONE ARK

MILK - 1 TBL SPN.

SALT - 1 TSP.

CHOPPED CORRIADER LEAVES - 1 TSP


METHOD :-

IMMERSE THE FLORETS IN SALTED HOT WATER FOR 10 MINUTES. DRAIN AND KEEP ASIDE. HEAT OIL OR GHEE IN A PAN ADD ORID DHAL, FENNEL, JEERA, PEPPER, CINNAMON, CARDAMOM, KALPASIPPUU, BAY LEAF. AFTER A MINUTE ADD CHOPPED ONION, TOMATO, FLORETS, CURRY LEAVES AND GREEN CHILLY. SAUTE WELL. SMASH THE DHALL ADD 3 CUPS OF WATER AND POUR IT WITH SALT & TURMERIC POWDER IN THE CONTENTS OF PAN. BRING TO BOIL . COVER IT WITH A LID & COOK FOR 7 MINUTES IN SIM. ADD MILK AND DECORATE WITH CORRIANDER LEAVES AND SERVE HOT WITH RICE CHIPS .


காலிஃப்ளவர் சூப்:-

தேவையானவை:-

காலிஃப்ளவர் - 10 துண்டு பூக்கள்

வேகவைத்த துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

பெரிய வெங்காயம் - 1 நீளமாக நறுக்கவும்

தக்காளி - 1 துண்டுகளாக்கவும்.

பச்சை மிளகாய் - 1 இரண்டாக வகிரவும்.

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

எண்ணெய் /நெய் - 2 டீஸ்பூன்

உளுந்து - 1/2 டீஸ்பூன்

சோம்பு - 1/3 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

பட்டை - 1 இன்ச்

இலை - இன்ச்

கல்பாசிப்பூ - 1 இன்ச்

ஏலக்காய் - 1

கருவேப்பிலை - 1 இணுக்கு.

கொத்துமல்லி தழை - 1 டீஸ்பூன்.

உப்பு - 1 டீஸ்பூன்

பால் - 1 டேபிள் ஸ்பூன்.


செய்முறை:-

உப்பு போட்ட கொதி நீரில் காலிஃப்ளவர்கள் மூழ்கும்படி 10 நிமிடம் வைக்கவும். பின் நீரை வடித்து தனியாக வைக்கவும். ஒரு பானில் எண்ணெய்/ நெய் ஊற்றி உளுந்து, சோம்பு, சீரகம்., மிளகு, கல்பாசிப்பூ., பட்டை., இலை., ஏலக்காய் போட்டு தாளிக்கவும். அதில் வெங்காயம், தக்காளி., கருவேப்பிலை., பச்சை மிளகாய், காலிஃப்ளவர் போட்டு நன்கு வதக்கவும். துவரம்பருப்பை நன்கு மசித்து 3 கப் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பானில் ஊற்றவும். கொதி வந்ததும் சிம்மில் மூடி போட்டு 7 நிமிடம் வேக விடவும். பால் ஊற்றி கொத்துமல்லித்தழை சேர்த்து வறுத்த அரிசி வத்தல்களுடன் பரிமாறவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...