எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 29 ஜூலை, 2011

SPROUTED GREENGRAM+ CABBAGE PORIYAL. முளைவிட்ட பச்சைப்பயறு+ முட்டைக்கோஸ் பொரியல்.

SPROUTED GREEN GRAM+ CABBAGE PORIYAL.
NEEDED:-
SPROUTED GREEN GRAM - 200 GMS
CABBAGE - 200 GMS

BIG ONION - 1 NO

OIL - 2 TSP

MUSTARD - 1 TSP

ORID DHALL - 1 TSP

RED CHILLY - 1 NO

CURRY LEAVES - 1 ARK.

SALT - 1/3 TSP.


METHOD:-

PARABOIL THE SPROUTED GREENS AND KEEP ASIDE. WASH AND SHRED THE CABBAGE. PEEL AND CHOP THE ONION. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHALL . WHEN IT BECOMES BROWN ADD HALVED RED CHILLY AND CURRY LEAVES. THEN ADD THE CHOPPED ONION AND SAUTE WELL. THEN ADD THE CABBAGE AND COOK FOR FEW MINUTES. THEN ADD THE PARABOILED GREEN GRAM AND ADD SALT. SPRAY SOME WATER AND STIRR WELL. KEEP COVERED AND COOK FOR 5 MINUTES IN SIM. REMOVE FROM FIRE AND SERVE IT PLAINLY AS SUNDAL OR AS A SIDE DISH FOR RICES.


முளைவிட்ட பச்சைப்பயறு+ முட்டைக்கோஸ் பொரியல்.:-

தேவையானவை:-

முளைவிட்ட பச்சைப்பயறு - 200 கிராம்

முட்டைக்கோஸ் - 200 கிராம்

பெரிய வெங்காயம் - 1

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்து - 1 டீஸ்பூன்

வரமிளகாய் - 1

கருவேப்பிலை_ 1 இணுக்கு


செய்முறை :-

முளை விட்ட பச்சைப் பயறை அரை வேக்காடு வேகவைத்துக் கொள்ளவும். முட்டைக்கோஸை கழுவி நறுக்கவும். வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும்., இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய்., கருவேப்பிலை போடவும். வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி முட்டைக்கோஸை சேர்த்து சிறிது வதக்கவும். வேகவைத்த பயறையும் உப்பையும் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு சிம்மில் 5 நிமிடம் வேகவிடவும். சூடாக சுண்டலாகவோ., சாம்பார்., குழம்பு சாதத்துக்கு தொட்டுக் கொள்ளவோ பரிமாறவும்.

திங்கள், 25 ஜூலை, 2011

BADAM HALWA. பாதாம் அல்வா.

BADAM HALWA :-
NEEDED :-
BADAM - 100 GMS
SUGAR - 200 GRAMS
GHEE - 200 GRAMS.
MILK - 1 LADLE.
KEVRA - FEW STRANDS. ( OPTIONAL)
BELL BRAND YELLOW FOOD COLOUR - 1PINCH

METHOD:-
SOAK THE BADAM IN HOT WATER FOR 2 HOURS. REMOVE THE SKIN AND COARSLY GROUND IT WITH LITTLE MILK. PLACE IT IN A PAN WITH SUGAR. KEEP IT IN STOVE AND STIRR CONTINUOUSLY WITH MEDIUM FIRE. WHEN IT BECOMES THICK AND STICKY TO THE LADLE REMOVE FROM FIRE AND ADD THE MELTED GHEE SLOWLY & STIRRING SIMULTANEOUSLY. STIRR TILL ALL THE GHEE IS ABSORBED. ADD THE SAFFRON STRANDS AND SERVE HOT.

THIS IS A DELICIOUS HALWA AND SERVED AT THE ENGAGEMENTS AND PENN AZAIPPU IN CHETTINAD MARRIAGES .




பாதாம் ஹல்வா;-
தேவையானவை:-
பாதாம் பருப்பு - 100 கி
ஜீனி - 200 கி
நெய் - 200 கி
பால் - 1 கரண்டி
குங்குமப்பூ - சிறிது.
பெல் ப்ராண்ட் யெல்லோ ஃபுட் கலர் - 1 சிட்டிகை.

செய்முறை :-
பாதாம் பருப்புக்களை 2 மணி நேரம் கொதிநீரில் ஊறவைத்து தோலுரிக்கவும். சிறிது பால் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். பானில் அரைத்த பாதாம் ., ஜீனி போட்டு மிதமான தீயில் கிளறவும். அல்வா சட்டியில் ஒட்டாமல் கரண்டியில் திரண்டு ஒட்டிக் கொள்ளும் போது அடுப்பை அணைத்து பானை கீழே இறக்கி வைக்கவும். உருக்கிய நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கொண்டே கை விடாமல் கிளறவும். மொத்த நெய்யும் உறிஞ்சப்பட்டபின் தொட்டால் கையில் அல்வா ஒட்டாது. குங்குமப்பூவை போட்டு சூடாக அல்வாவை பரிமாறவும்.

இது மிக சுவையான அல்வா. செட்டிநாட்டில் திருமணம் பேசி முடித்துக் கொள்ளும் போதும்., பெண் அழைப்பின் போதும் இது பரிமாறப்படும்.




திங்கள், 11 ஜூலை, 2011

BEETROOT MASAL. பீட்ரூட் மசால்..

BEETROOT MASAL:-

NEEDED:-

BEETROOT - 250 GMS

CHANNA DHAL - 1 CUP PARABOILED




TO GRIND:-

RED CHILLIES - 4 NOS.

SOMPH - 1/2 TSP

GRATED COCONUT - 2 TSP

FRIED CHANNA DHAL- 1 TSP

SALT - 1 TSP
SMALL ONION - 2 NOS

GARLIC - 1 POD


FOR FRY :-

OIL - 2 TSP

MUSTARD - 1 TSP

ORID DHAL - 1 TSP

KALPAASIPPUU - I INCH

BAY LEAF - 1 INCH

CURRY LEAVES - 1 ARK


METHOD :-
PEEL ., WASH AND SQUARES THE BEETROOTS. GRIND ALL THE INGREDIENTS WITH LITTLE WATER. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN ADD KALPASIPPUU., BAY LEAF AND CURRYLEAVES. THEN ADD THE BEETROOTS AND SAUTE WELL. AFTER 5 MINUTES ADD THE MASALA AND SAUTE WELL. ADD LITTLE WATER AND COVER THE PAN WITH A LID. AGAIN COOK FOR 5 MINUTES THEN ADD THE CHANNA DHAL. STIRR WELL. KEEP IT FOR 2 MINUTES IN FIRE AND OFF THE GAS. SERVE HOT WITH CURD RICE. CHILDREN LIKE THIS HOT AND SWEET BEETROOTS.




பீட்ரூட் மசால்:-

தேவையானவை :-

பீட்ரூட் - 250 கிராம்

கடலைப்பருப்பு - 1 கப் பதமாக வேகவைத்தது.


அரைக்க:-

வரமிளகாய் - 4

சோம்பு - 1/2 டீஸ்பூன்

துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன்

பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்

உப்பு - 1 டீஸ்பூன்

சின்னவெங்காயம் - 2

பூண்டு - 1




தாளிக்க:-

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்து - 1 டீஸ்பூன்

கல்பாசிப்பூ - 1 இஞ்ச்

பட்டை இலை - 1 இஞ்ச்

கருவேப்பிலை - 1 இணுக்கு




செய்முறை:-
பீட்ரூட்களைத் தோல்சீவிக் கழுவி சின்ன சதுரங்களாக நறுக்கவும். எல்லா மசாலா சாமன்களையும் ஒன்றாகப் போட்டு லேசாக தண்ணீர் ஊற்றி அரைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து போட்டு சிவந்ததும்., பட்டை இலை., கல்பாசிப்பூவைப் போடவும். பின் பீட்ரூட்டைப் போட்டு வதக்கவும். 5 நிமிடம் வதக்கிய பிறகு அதில் மசாலாவைப்போட்டு நன்கு வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும். 5 நிமிடம் கழித்து கடலைப்பருப்பைப் போட்டு நன்கு கிளறவும். 2 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து சூடாக தயிர் சாதத்தோடு பரிமாறவும். இனிப்பும் உறைப்புமான இந்த பீட்ரூட் மசாலாவை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

வெள்ளி, 8 ஜூலை, 2011

BOILED EGG. அவித்த முட்டை.

BOILED EGG:-
NEEDED:-

EGG - 4 NOS.

JEERA PEPPER POWDER - 1 TSP

SALT - 1/4 TSP

METHOD:-

WASH AND PLACE THE EGGS IN A PAN. POUR WATER TO IMMERSE THE EGGS. KEEP BOILING FOR 3 MINUTES FOR HALF BOILED EGG. AND FOR 5 MINUTES FOR NORMAL BOILED EGGS . IF U WANT TO HAVE HARD BOILED EGGS . KEEP IT FOR 7 MINUTES.


REMOVE FROM FIRE. POUR COOL WATER AND REMOVE THE SHELL. SLIT OPEN ON BOTH SIDES AND SPRINKLE PEPPER JEERA POWDER AND SALT. SERVE HOT WITH VARIETY RICES.


FOR WORK OUTS DAILY YOU CAN HAVE 2 BOILED EGGS WITHOUT YOLK.


அவித்த முட்டை:-

தேவையானவை:-

முட்டை - 4

மிளகு ஜீரகப்பொடி - 1 டீஸ்பூன்

உப்பு - 1/4 டீஸ்பூன்


செய்முறை:-

முட்டைகளை நன்கு கழுவி ஒரு பானில் வைத்து மூழ்கும்வரை நீரூற்றவும். ஹாஃப் பாயில்ட் ( அரைவேக்காடு) முட்டைக்கு 3 நிமிடம் வேக வைத்தால் போதும். முழுதாய் வேக 5 நிமிடம் வேக விடவும். ஹார்ட் பாயில்ட் முட்டைகளுக்கு 7 நிமிடம் வேகவிடவும். வெந்தவுடன் கொதி நீரை வடித்துவிட்டு குளிர்ந்த நீர் ஊற்றி தோலுரிக்கவும். இரண்டு பக்கமும் வகிர்ந்து உப்பு மிளகு ஜீரகப் பொடியைத் தூவவும். சூடாக கலவை சாதங்களுடன் பரிமாறவும்.


மூணுதானே இருக்குன்னு பார்க்கிறீங்களா.. ஒண்ணை நான் சாப்பிட்டுட்டேன்..:))


தினம் ஒரு முட்டை சாப்பிடுங்க. மஞ்சள் கரு இல்லாம சாப்பிடலாம் .

வெள்ளி, 1 ஜூலை, 2011

DIOSCOREA BULBIFERRA LINN FRY. வள்ளிக்கிழங்கு பொரியல்.

DIOSCOREA BULBIFERA LINN:-


NEEDED :-


DIOSCOREA BULBIFERA LINN - 1 PIECE.

TURMERIC POWDER - 1 PINCH


OIL - 1 TSP


MUSTARD - 1 TSP


ORID DHAL - 1 TSP


RED CHILLY - 1 NO


CURRY LEAVES - 1 ARK


SALT - 1/2 TSP




METHOD:-


PEEL AND WASH THE DIOSOREA BULBIFERA LINN WELL AND MAKE INTO SLICES. COOK THEM IN HOT WATER WITH SALT AND TURMERIC POWDER TILL TENDER. STRAIN THEM. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL ., CURRY LEAVES AND HALVED CHILLIES. ADD THE SLICES WITH NEEDED SALT. STIRR WELL FOR ONE MINUTE AND SERVE IT WITH VATHAKKZAMBU RICE OR SAMBAR RICE. ITS PREPARED AND SERVED IN CHETTINADU'S PADAIPPUS.



வள்ளிக்கிழங்கு பொரியல்:-


தேவையானவை:-


வள்ளிக்கிழங்கு - 1 துண்டு.


மஞ்சள் பொடி - 1 சிட்டிகை.


எண்ணெய் - 1 டீஸ்பூன்


கடுகு - 1 டீஸ்பூன்


உளுந்து - 1 டீஸ்பூன்


வரமிளகாய் - 1


கருவேப்பிலை - 1 இணுக்கு.


உப்பு - 1/2 டீஸ்பூன்.



செய்முறை :-


வள்ளிக்கிழங்கைத் தோல் சீவி துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவவும். உப்பும் மஞ்சள் பொடியும் சேர்த்து வேகவிடவும். மென்மையானதும் வடிகட்டவும். பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்துபோட்டு சிவந்ததும்., கருவேப்பிலை., வரமிளகாய் தாளிக்கவும். பின் கிழங்கை சேர்த்து தேவையான உப்பு போட்டு நன்கு ஒருநிமிடம் கிளறி இறக்கவும். வத்தக்குழம்பு., சாம்பார் சாதத்தோடு பரிமாறவும். இது செட்டி நாட்டுப் படைப்புகளில் செய்து பரிமாறப்படும்.




Related Posts Plugin for WordPress, Blogger...