எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 28 பிப்ரவரி, 2011

BREAD VEG UPMA.. ப்ரெட் வெஜ் உப்புமா..

BREAD VEG UPMA.:-
NEEDED :-
BREAD - HALF LOAF
MIXED VEGETABLES ( CARROT., BEANS., CAULIFLOWER., PEAS ) - 1 CUP CHOPPED.
BIG ONION - 1 CHOPPED
OIL - 2 TSP
AMUL BUTTER - 1 GALLOP
PEPER JEERA POWDER - 1/4 TSP
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
SALT - 1/4 TSP
METHOD :-
SHRED THE BREAD LOAF. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN ADD CHOPPED ONION., SAUTE WELL. THEN ADD THE MIXED VEGETABLES AND SAUTE WELL. THEN ADD THE BREAD CRUMBLES WITH BUTTER AND PEPPER JEERA POWDER. FRY FOR 10 MINUTES IN SIM. SERVE HOT WITH MAAGI HOT AND SWEET TOMATO CHILLI SAUCE.
IT CAN BE SERVED IN THE EVENING.
ப்ரெட் வெஜ் உப்புமா:-
தேவையானவை :-
ப்ரெட் - அரை லோஃப்
காய்கறிக் கலவை ( காரட்., பீன்ஸ்., காலிஃப்ளவர்., பட்டாணி ) - 1 கப் பொடியாக அரிந்தது.
வெரிய வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது.
எண்ணெய் - 2 டீஸ்பூன்
அமுல் பட்டர் - 1 காலப் ( குழிக்கரண்டி)
மிளகு ஜீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்.

செய்முறை:-
ப்ரெட்டை உதிர்த்து வைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போடவும். வெடித்த பின் உளுந்து போட்டு சிவந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும். பின் காய்கறிக் கலவையை கொட்டி வதக்கவ்ம். பின் ப்ரெட் துண்டுகளைப் போட்டு அமுல் பட்டரும்., மிளகு ஜீரகப் பொடியும் போட்டு 10 நிமிடங்கள் சிம்மில் வதக்கவும். சூடாக மாகி ஹாட் அண்ட் ஸ்வீட் டொமாடோ சில்லி சாஸுடன் பரிமாறவும்.

இது மாலை நேரங்களில் பரிமாற ஏற்றது.

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

PEPPER CHICKEN.. பெப்பர் சிக்கன் ( கோழி மிளகுக்கறி)



PEPPER CHICKEN :-
NEEDED:-
CHICKEN WITH BONES( WITHOUT SKIN) - 1/2 KG
SMALL ONION - 20 NOS.(CHOPPED FINELY)
GREEN CHILLI - 2 NOS.
GINGER - 1 INCH PIECE
GARLIC - 2 PODS
RED CHILLI POWDER - 1/2 TSP
CORRIANDER POWDER - 1 TSP
PEPPER - 1/2 TBLSPN
JEERA - 1/4 TBLSPN
SOMPH - 1 TSP
OIL - 1 TBLSPN.
KALPASIPPUU - 1
BAY LEAF - 1
CLOVES - 2 NO
CARDAMOM - 1 NO.

METHOD :-
WASH THE CHICKEN WELL. KEEP ASIDE. HEAT THE OIN IN THE PAN ADD KALPASIPPUU., BAY LEAF., CLOVE AND CARDAMOM. ADD SMALL ONIONS SAUTE WELL. ADD THE CHICKEN AND SAUTE WELL. GRIND THE REST INGREDIENTS INTO A PASTE. ADD THIS TO CHICKEN AND SAUTE WELL. ADD LITTLE WATER. STIRR OCCASSIONALLY. COOK WELL IN SIM FOR 20 MINUTES OR TILL DONE. SERVE HOT WITH CHAPATHIS., DOSAS , PLAIN RICE., NAN., PHULKAS. AND ROTIS.

ITS GOOD FOR COLD AND COUGH TOO.

பெப்பர் சிக்கன் ( கோழி மிளகு கறி) :-
தேவையானவை :-
சிக்கன் எலும்புகளோடு தோல் நீக்கி - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 20 பொடியாக நறுக்கவும்.
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 இஞ்ச் துண்டு
பூண்டு - 2 பல்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மிளகு - 1/2 டேபிள் ஸ்பூன்
ஜீரகம் - 1/4 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கல்பாசிப்பூ - 1
பட்டை இலை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 1

செய்முறை:-
சிக்கனை கழுவி தண்ணீரை நன்கு வடிக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கல்பாசிப்பூ., பட்டை இலை., கிராம்பு., ஏலக்காய் போட்டு பின் சின்ன வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும். மற்ற மசாலா சாமான்களை ஒன்றாக மைய அரைக்கவும்.. அந்த விழுதை சிக்கனில் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்க்கவும். 20 நிமிடங்கள் மூடி போட்டு அவ்வப்போது கிளறி மென்மையாகும் வரை வேகவிடவும். சூடாக சப்பாத்தி., தோசை., சாதம்., நான்., புல்கா., ரொட்டிகளுடன் பரிமாறவும்.
இது சளி இருமலை கட்டுப்படுத்தும் உணவு.

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

SEMOLINA (VERMICELLI) VEG UPMA.. சேமியா வெஜ் உப்புமா..

SEMOLINA ( VERMICELLI) VEG UPMA:-
NEEDED :-
SEMOLINA - 1 PACKET.
BIG ONION - 1 NO .CHOPPED
GREEN CHILLY - 1 NO . HALVED
CARROT - 1 NO CHOPPED
BEANS - 4 NOS. CHOPPED.
OIL - 1 TBLSPN
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
CURRY LEAVES - 1 ARK
SALT - 1 TSP
WATER - EQUAL TO SEMOLINA.

METHOD :-
HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL AND GREEN CHILLIES. THEN ADD CURRY LEAVES., ONION., CARROT AND BEANS., SAUTE WELL. POUR WATER AND ADD SALT. BRING TO BOIL. ADD SEMOLINA AND STIRR WELL. SIMMER THE GAS, COVER AND COOK FOR 5 MINUTES. SERVE HOT WITH CHUTNEYS AND SAMBAR .


சேமியா வெஜ் உப்புமா:-
தேவையானவை :-
சேமியா - 1 பாக்கெட்
பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது.
பச்சை மிளகாய் - 1 வகிர்ந்தது.
காரட் - 1 நறுக்கியது.
பீன்ஸ் - 4 நறுக்கியது.
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு - 1 டீஸ்பூன்
தண்ணீர் - சேமியாவுக்கு சரிக்குச் சரி அளவு


செய்முறை :-
பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் கருவேப்பிலை., வெங்காயம்., காரட்., பீன்ஸ்., பச்சைமிளகாய் போடவும். நன்கு வதங்கியதும் தண்ணீர் ஊற்றி உப்பு போடவும். கொதி வந்ததும் சேமியாவை சேர்க்கவும். நன்கு கிளறி சிம்மில் வைத்து மூடி போட்டு 5 நிமிடம் வேகவிடவும். சூடாக சட்னி., சாம்பாருடன் பரிமாறவும்.

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

COW PEAS, DRIED MANGO GRAVY. தட்டைப்பயறு ( காராமணி) மாவற்றல் குழம்பு.


COW PEAS DRIED MANGO GRAVY.:-
NEEDED:-
COW PEAS - 1 CUP .
DRIED MANGO PIECES - 10 NOS.
SMALL ONION - 10 NOS.
GARLIC - 2 PODS.
TOMATO - 1 NO.
CHILLI POWDER - 11/2 TSP
CORRIANDER POWDER - 1 TBLSPN.
TURMERIC POWDER - 1 PINCH.
TAMARIND - 1 AMLA SIZE.
SALT - 1 1/2 TSP
OIL - 2 TSP
MUSTARD - 1 TSP
JEERA - 1 TSP.
CURRY LEAVES - 1 ARK.
METHOD :-
FRY THE COWPEAS IN A SHALLOW BOTTOMED PAN FOR 2 MINUTES. POUR WATER AND PRESSURE COOK FOR 4 WHISTLES. COOK THE DRIED MANGOES., ONION., TOMATO ALSO IN A SEPERATE CUP IN COOKER. AFTER THE VAPOUR RELEASES MIX THE PEAS AND MANGOES WELL ADD THE CHILLI PWDR., CORRIANDERPWDR., AND TURMERIC POWDER. SOAK TAMARIND IN 2 CUPS OF WATER TAKE THE PULP AND ADD IT WITH SALT IN THE GRAVY . BRING TO BOIL AND SIMMER FOR 5 MINUTES. ADD THE CRUSHED GARLICS AND TOSS IT WITH MUSTARD AND JEERA IN OIL. SERVE HOT WITH PLAIN RICE OR UTHAPPAMS OR IDDLIES.

தட்டைப்பயிறு மாவற்றல் குழம்பு:-
தேவையானவை :-
தட்டைப்பயறு ( காராமணி ) - 1 கப்
மாங்காய் வற்றல் - 10
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 2
தக்காளி - 1
மிளகாய்ப்பொடி - 2 டீஸ்பூன்
மல்லிப்பொடி - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்பொடி - 1 சிட்டிகை.
புளி - 1 நெல்லிக்காய் அளவு
உப்பு - 1 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை:-
தட்டைப்பயறை வறுத்து பிரஷர் குக்கரில் 4 விசில் வரும்வரை வேகவிடவும். மாவற்றல்., தக்காளி., வெங்காயத்தை சின்ன தட்டில் குக்கரில் வைத்து வேகவிடவும். ஆவி வெளியேறியதும் இரண்டையும் நன்றாக கலந்து மிளகாய் பொடி., மல்லி பொடி., மஞ்சள் பொடி போடவும். புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து உப்புடன் குழம்பில் சேர்க்கவும். கொதிவந்தபின் சிம்மிம் 5 நிமிடம் வைத்து., எண்ணையில் கடுகு., ஜீரகம் தாளித்து கொட்டவும். பூண்டு தட்டிப் போட்டு இறக்கவும். இதை சாதம் அல்லது ஊத்தப்பம் அல்லது இட்லியுடன் பரிமாறவும்.

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

CHILLI BAROTTA.. சில்லி பரோட்டா..


CHILLI BAROTTA..:-
NEEDED :-
BAROTTA - 2 NOS. DICED.
ONION - 2 NOS. CUT LENGTHWISE.
RED CHILLI POWDER - 1/4 TSP/
RED FOOD COLOUR - 1 PINCH.
SALT - 1/4 TSP.
OIL - FOR FRYING.

METHOD :- HEAT OIL IN A PAN FRY THE DICED BAROTTAS TILL LITTLE CRISPY. . THEN KEEP THE PAN WITH LITTLE OIL ADD ONIONS ., CHILLI POWDER ., AND SALT. SAUTE FOR HALF MINUTE THEN ADD BAROTTAS AND RED FOOD COLOUR. STIRR WELL TO MIX THEM EVENLY AND SERVE HOT WITH SAUCES OR PLAIN AS A EVENING SNACK.

சில்லி பரோட்டா:-
தேவையானவை :-
பரோட்டா - 2 சதுரமாக வெட்டவும்.
வெங்காயம் - 2 நீளமாக அரியவும்.
மிளகாய்ப் பொடி - 1/4 டீஸ்பூன்
ரெட் ஃபுட் கலர் - 1 சிட்டிகை.
உப்பு - 1/4 டீஸ்பூன்.
எண்ணெய் - பொறிக்க.

செய்முறை :-
பானில் எண்ணெயைக் காயவைத்து பரோட்டா துண்டுகளை கிரிஸ்பியாக பொறிக்கவும். பின் கொஞ்சம் எண்ணெயில் வெங்காயம்., மிளகாய் பொடி., உப்பு போட்டு அரை நிமிடம் வதக்கவும். அதில் பரோட்டா துண்டுகளை ரெட் ஃபுட் கலருடன் போட்டு நன்கு கலக்கவும். சூடாக சாஸுடன் அல்லது ப்ளையினாக மாலை டிஃபனாக கொடுக்கவும்.

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

RIDGED GOURD SKIN THUVAIYAL... பீர்க்கங்காய்த் தோல் துவையல்.


RIDGED GOURD SKIN CHUTNEY:-
NEEDED :-
SKIN OF RIDGED GOURD - 1 CUP
RED CHILLIES - 4 NOS
BIG ONION - 1 NO
TOMATO - 1 NO
TAMARIND - 1 POD
SALT - 1/2 TSP
OIL - 3 TSP
MUSTARD - 1 TSP
ORID DHAL - 2 TSP
ASAFOETIDA - 1 PINCH
CURRY LEAVES - 1 ARK.

METHOD :-
WASH AND REMOVE THE RIDGES OF RIDGE GOURD. CUT INTO SMALL PIECES. PEEL WASH AND DICE ONION AND TOMATO. HEAT OIL IN A PAN ADD MUSTARD. AFTER SPLUTTERING ADD ORID DHAL AND ASAFOETIDA. ADD CURRY LEAVES AND RIDGEGOURD PIECES. SAUTE WELL FOR 3 MINUTES. THEN ADD TOMATO AND ONION . SAUTE WELL . ADD TAMARIND AND SALT. REMOVE FROM FIRE . AFTER COOL GRIND IT COARSLY AND SERVE IT WITH DOSA., IDDLIE OR PLAIN RICE.

ITS RICH IN IRON., AND IMPROVES HEAMOGLOBIN IN BLOOD .

பீர்க்கங்காய்த் தோல் துவையல்:-
தேவையானவை :-
பீர்க்கங்காய்த் தோல் - 1 கப்
சிகப்பு மிளகாய் - 4
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
புளி - 1 சுளை
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை :-
பீர்க்கங்காய் தோலை நரம்புகள் நீக்கி சின்ன துண்டுகள் செய்யவும். வெங்காயம் தக்காளியை கழுவி துண்டுகள் செய்யவும். பானில் எண்ணெயைக் காய வைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும்., பெருங்காயம் ., கருவேப்பிலை போடவும். பின் பீர்க்கங்காய்த் தோலைப் போட்டு நன்கு வதக்கவும். 3 நிமிடங்கள் வதக்கிய பின் வெங்காயம், தக்காளி., போடவும். உப்பு., புளி போட்டு நன்கு வதங்கியதும் ஆற வைக்கவும். கொரகொரப்பாக அரைத்து இட்லி., தோசை., சாதத்தோடு பரிமாறவும்.

இது இரும்புச் சத்து நிறைந்தது. எனவே ரத்தத்தில் ஹீமோக்ளோபினை அதிகரிக்கும்.

புதன், 2 பிப்ரவரி, 2011

INCHI PULI.. இஞ்சிப் புளி..

INCHI PULI :-
NEEDED:-
GINGER - 100 GMS
GREEN CHILLIES - 50 GMS
TAMARIND - 1 LEMON SIZE BALL.
SALT - 1 TSP
OIL - 1 TBL SPN
MUSTARD - 1 TSP
FENUGREEK - 1/4 TSP
ASAFOETIDA POWDER - 1 PINCH
RICE FLOUR - 1 TSP.
JAGGERY OR SUGAR - 1/2 TSP OPTIONAL

METHOD :-
SOAK TAMARIND IN HALF CUP WATER AND TAKE THE PULP. WASH AND CUT THE CHILLIES AND GINGER INTO STICKS. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD FENUGREEK AND ASAFOETIDA . THEN ADD CHILLIES AND GINGER . SAUTE WELL. POUR THE TAMARIND PULP. ADD SALT. BRING TO BOIL. AFTER 5 MINUTES KEEP IT IN SIM AND ADD THE RICE FLOUR MIXED WITH LITTLE WATER. IF DESIRED ADD JAGGERY OR SUGAR. COOK TILL TENDER. SERVE HOT WITH CURD RICE AND CHAPPATIS.

இஞ்சிப் புளி:-
தேவையானவை:-
இஞ்சி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 50 கிராம்
புளி - 1 எலுமிச்சை அளவு
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை.
அரிசி மாவு - 1 டீஸ்பூன்.
வெல்லம் அல்லது சீனி - 1/2 டீஸ்பூன் விரும்பினால்.

செய்முறை :-
புளியை அரை கப் நீரில் கரைத்து சாறெடுக்கவும். இஞ்சியையும்., பச்சை மிளகாயையும் கழுவி குச்சிகளாக நறுக்கவும். பானில் எண்ணெயை காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் வெந்தயம்., பெருங்காயப் பொடி போடவும். பச்சை மிளகாய்., இஞ்சி போட்டு நன்கு வதங்கியதும் புளிச்சாறை ஊற்றவும். உப்பு போடவும். அரிசி மாவை சிறிது நீரில் கரைத்து ஊற்றவும். விரும்பினால் சீனி அல்லது வெல்லம் போடவும். நன்கு மென்மையாக வெந்ததும் தயிர் சாதம் அல்லது சப்பாத்தியுடன் சூடாக பரிமாறவும்.

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

GUAR (CLUSTER) BEANS KOLA.. கொத்தவரங்காய் கோளா..


GUAR ( CLUSTER ) BEANS KOLA:-
NEEDED:-
GUAR BEANS - 250 GMS., CHOPPED.
THUVAR DHAL - 1 CUP SOAKED.
ONION - 2 NOS PEELED ., CHOPPED.
RED CHILLIES - 5 NOS
SOMPH - 1 TSP
JEERA - 1/2 TSP
SALT - 1 TSP
CURRY LEAVES - 1 ARK.
COCONUT CRATED - 1 TBLSPN (OPTIONAL.)
MUSTARD - 1 TSP
ORID DHAL - 2 TSP
SOMPH 1/2 TSP
OIL - 100 GMS
METHOD :-
GRIND RED CHILLIES., SOMPH., JEERA., SALT .,COCONUT TOGETHER. GRIND THE THUVAR DHAL COARSLY. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL & SOMPH. WHEN IT BECOMES BROWN ADD CURRY LEAVES ., ONION AND GUAR BEANS. SAUTE WELL FOR 5 MINUTES. ADD THE CHILLI MASALA AND SAUTE WELL. AFTER 5 MINUTES ADD THUVAR DHAL AND STIRR WELL. SIM THE STOVE AND COOK IT FOR 20 MINUTES. STIRR OCASSIONALY. SERVE HOT WITH SAMBAR RICE., RASAM ICE AND CURD RICE..

கொத்தவரங்காய் கோளா;-
தேவையானவை:-
கொத்தவரங்காய் - 250 கி. பொடியாக அரிந்தது.
துவரம் பருப்பு - 1 கப் ஊறவைத்தது
பெரிய வெங்காயம் - 2 பொடியாக அரிந்தது.
வர மிளகாய் - 5
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இணுக்கு
தேங்காய் திருகியது - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 100 மிலி

செய்முறை:-
மிளகாய்., சோம்பு., சீரகம்., உப்பு., தேங்காயை ஒன்றாக அரைக்கவும். துவரம் பருப்பை கொரகொரப்பாக அரைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போடவும். வெடித்தவுடன் உளுந்து போடவும். சிவந்தவுடன் சோம்பு போடவும். கருவேப்பிலை., வெங்காயம்., கொத்தவரங்காய் போட்டு நன்கு வதக்கவும். 5 நிமிடம் வதங்கியதும் மிளகாய் மசாலாவை போட்டு 5 நிமிடம் வதக்கவும். பின் அரைத்த துவரம்பருப்பை போட்டு நன்கு கிளரவும். சிம்மில் வைத்து 20 நிமிடங்கள் அவ்வப்போது கிண்டி வேகவைக்கவும். நன்கு வெந்து உதிரியானதும் சாம்பார் சாதம்., ரசம் சாதம்., தயிர் சாதத்துடன் பரிமாறவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...