எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 26 ஜனவரி, 2011

SARKARAIP PONGAL .. சர்க்கரைப் பொங்கல்..


SARKARAIP PONGKAL..
NEEDED :-
RAW RICE - 1 CUP
MILK - 2 CUPS.
GREEN GRAM DHAL - 1/3 CUP
JAGGERY - 1CUP
GHEE - 1 TNLSPN
CARDAMOM - 4 NOS.
CASHEWS - 10 NOS
KISMIS - 10 NOS.
PACHAI KARPURAM - 1 PINCH ( OPTIONAL)

SARKKARAIP PONGKAL:-
MIX RICE AND GREENGRAM DHAL TOGETHER AND WASH WELL. PLACE IT IN A COOKER WITH 2 CUPS OF WATER PLUS 2 CUPS OF MILK. COOK FOR 3 WHISTLES AND SIMMER FOR FEW MINUTES. OPEN THE COOKER AFTER 10 MINUTES ADD JAGGERY AND STIRR WELL. IF NEEDED ADD BOILED MILK HALF CUP . WHEN THE JAGGERY MELTS SWITCH OFF THE STOVE. HEAT GHEE IN A PAN ADD CASHEWS AND KISMIS AND TOSS IT OVER THE PONGAL. POWDER THE CARDAMOM AND SPRAY ON TOP OF THE PONGAL . TO ADD FLAVOUR YOU CAN ADD A PINCH OF PACHAI KARPURAM. SERVE HOT. ITS DELICIOUS ONE AND SERVED IN PONGAL & MATTU PONGAL.

சர்க்கரைப் பொங்கல்:-
தேவையானவை:-
பச்சரிசி - 1 கப்
பால் - 2 கப்
பாசிப்பருப்பு - 1 /3 கப்
வெல்லம் - 1 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்.
ஏலக்காய் - 4
முந்திரி - 10
கிஸ்மிஸ் - 10
பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை ( விரும்பினால்)

செய்முறை:-
பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் நன்கு கழுவி குக்கரில் போட்டு 2 கப் தண்ணீர் + 2 கப் பால் ஊற்றி குக்கரில் 3 விசில் வரும்வரை வேகவிடவும். ஆறியபின் குக்கரைத் திறந்து வெல்லம் சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கிளறவும். தேவைப்பட்டால் அரை கப் காய்ச்சிய பால் சேர்த்துக் கொள்ளவும். வெல்லம் கரைந்தபின் சில நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும். பானில் நெய்யைக் காயவைத்து முந்திரி., கிஸ்மிஸ் பழத்தை பொன்னிறமாக பொறித்து போடவும். ஏலக்காயைப் பொடி செய்து தூவவும். சூடாக பரிமாறவும். ருசிமிக்க இது பொங்கல் ., மாட்டுப் பொங்கல் தினங்களில் செய்யப்படும்.

செவ்வாய், 25 ஜனவரி, 2011

TURKEYBERRY TAMARIND GRAVY . .. சுண்டைக்காய் புளிக்குழம்பு..


TURKEYBERRY TAMARIND GRAVY:-
NEEDED :-
TURKEYBERRY - 1 CUP
SMALL ONION - 10 NOS
GARLIC - 6 PODS
TOMATO - 1 NO
TAMARIND - 1 LEMON SIZE BALL
SALT - 2 TSP
RED CHILLI POWDER - 2 TSP
DHANIA POWDER - 1 TBL SPN
TUMERIC POWDER - 1 PINCH.
ASAFOETIDA - 1/8 INCH PIECE.
CURRY LEAVES - 1 ARK
MUSTARD - 1 TSP
JEERA- 1/2 TSP
FENUGREEK - 1 /2 TSP
SUGAR - 1 PINCH
OIL - 1 TBLSPN.

METHOD :-
HALVE THE TURKEY BERRIES AND WASH THEM IN WATER. PEEL SMALL ONION., GARLIC., AND HALVE THEM. DICE TOMATO. SOAK TAMARIND AND SALT IN 3 CUPS OF WATER AND TAKE THE PULP. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD JEERA., AND FENUGREEK., AND ASAFOETIDA. ADD CURRY LEAVES. ONION., GARLIC., TOMATO AND TURKEY BERRIES. SAUTE THEM WELL. POUR THE TAMARIND PULP . ADD TURMERIC PWDR., CHILLI PWDR., AND DHANIA PWDR. BRING TO BOIL . ADD A PINCH OF SUGAR AND KEEP IT IN SIM COVERED WITH A LID FOR 20 MIN., AND THE OIL WILL SEPERATES. SERVE HOT WITH PLAIN RICE OR CURD RICE. OR WITH HOT IDDLIES.

சுண்டைக்காய் புளிக்குழம்பு :-
தேவையானவை :-
சுண்டைக்காய் - 1 கப்
சின்ன வெங்காயம் - 10
வெள்ளைப்பூண்டு - 6 பல்
தக்காளி - 1
புளி - 1 எலுமிச்சை அளவு
உப்பு - 2 டீஸ்பூன்.
மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன்
மல்லிப் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சப் பொடி - 1 சிட்டிகை
பெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டு
கருவேப்பிலை - 1 இணுக்கு
கடுகு - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
சீனி - 1 சிட்டிகை.
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை :-
சுண்டைக்காய்களை இரண்டாக நறுக்கி தண்ணீரில் போடவும். சின்ன வெங்காயம்., வெள்ளைப் பூண்டை தோலுரித்து இரண்டாக நறுக்கவும். தக்காளியைத் துண்டுகள் செய்யவும். புளியையும்., உப்பையும் 3 கப் தண்ணீரில் ஊறப் போடவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்தவுடன் ., சீரகம்., வெந்தயம்., பெருங்காயம் போடவும். கருவேப்பிலை., வெங்காயம்., பூண்டு ., தக்காளி., சுண்டைக்காய்களைப் போட்டு நன்கு வதக்கவும். புளித்தண்ணீரை ஊற்றி மஞ்சள் பொடி., மிளகாய்ப்பொடி., மல்லிப் பொடி போடவும். நன்கு கொதி வந்தவுடன் சீனி சேர்த்து மூடி வைத்து 20 நிமிடம் சிம்மில் வைக்கவும். எண்ணெய் பிரிந்தவுடன் இறக்கி சாதம்., தயிர் சாதம் அல்லது சூடான இட்லிகளுடன் பரிமாறலாம்.

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

IDDLIE --AVIAL.. இட்லி-- அவியல்..

AVIAL..:-
NEEDED :-
POTATO LARGE - 1 NO
BRINJAL./ ( EGG PLANT ..)/( AUBERGINE) - 3 NOS.
BIG ONION - 1 NO
TOMATO - 1 NO
CURRY LEAVES - 1 ARK

TO GRIND :-
GREEN CHILLIES - 4 NOS
CRATED COCONUT - 1 CUP
FRIED CHANNA DHAL - 1 TBLSPN.
SOMPH - 1 TSP
JEERA - /2 TSP
PEPPERCORNS - 5 NOS.
SMALL ONION - 2 NOS
GARLIC - 2 PODS

SALT - 1 TSP
OIL - 3 TSP FOR FRYING.

METHOD:-
GRIND ALL THE INGREDIENTS. WASH PEEL AND DICE ONION., TOMATO., AUBERGINE AND POTATO. HEAT OIL IN A PAN . FRY ALL THE VEGETABLES AND CURRY LEAVES. SAUTE WELL ADD THE GROUND MASLA AND SAUTE FOR 1 MINUTE . ADD SALT AND 4 CUPS OF WATER. BRING TO BOIL AND SIMMER FOR 10 MINUTES . COOK TILL VEGETABLES ARE TENDER AND SERVE HOT WITH IDDLIES OR DOSAS..

ITS A CHETTINADU SPECIAL AND SERVED IT WITH MORNING TIFFINS.

அவியல்:-
தேவையானவை:-
பெரிய உருளைக்கிழங்கு - 1
கத்திரிக்காய் - 3
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கருவேப்பிலை - 1 இணுக்கு

அரைக்க:-
பச்சை மிளகாய் - 4
தேங்காய் துருவியது - 1 கப்
பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 5
சின்ன வெங்காயம் - 2
பூண்டு - 2 பல்

உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்.

செய்முறை:-
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை நன்கு மைய அரைக்கவும். காய்கறிகளைத் தோல் சீவி சதுரங்களாக நறுக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து வெங்காயம்., தக்காளி., உருளை., கத்திரியை வதக்கவும் . கருவேப்பி்லை சேர்க்கவும். அரைத்த கலவையை ஊற்றி 1 நிமிடம் வதக்கவும். உப்பு சேர்க்கவும். 4 கப் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் 10 நிமிடம் சிம்மில் வைக்கவும். காய்கள் மென்மையாகும் வரை வேகவைத்து சூடாக இட்லியுடன்., தோசையுடன் பரிமாறவும்..

இது செட்டிநாட்டில் காலைப் பலகாரத்துக்கு தொட்டுக்கொள்ள செய்யப்படும் குருமா வகையைப் போன்றது.

வியாழன், 20 ஜனவரி, 2011

POTATO CHIPS.. உருளைக்கிழங்கு சிப்ஸ்..


POTATO CHIPS.:-
NEEDED :-
POTATO - 1/2 KG
SALT - 1/2 TSP
JEERA PEPPER POWDER OR
RED CHILLY POWDER - 1/2 TSP
OIL - 150 GMS.
METHOD :-
PEEL AND WASH THE POTATOES .. HEAT 4 CUPS OF WATER IN A VESSEL AND ADD THE WHOLE POTATOS . KEEP IT IN STOVE FOR 1 MINUTE AND OFF THE GAS.. THEN SLICE THE POTATOES AND FRY THEM IN OIL. WHEN ITS CRISPY TAKE OUT AND SPRAY EITHER JEERA PEPPER POWDER OF RED CHILLY POWDER WITH SALT ,. SERVE IT WITH MIXED RICES., PULAO. , OR AS EVENING SNACKS.
உருளைக்கிழங்கு சிப்ஸ்..:-
தேவையானவை.:-
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
உப்பு - 1/2 டீஸ்பூன்
மிளகு சீரகப் பொடி அல்லது
சிகப்பு மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 150 கிராம்.
செய்முறை:-
உருளைக்கிழங்குகளைத் தோல் சீவி நன்கு கழுவவும்.. ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி சுட வைத்து உருளைகள் மூழ்கும் படி போட்டு ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். பின் உருளைகளை எடுத்து ஸ்லைசாக சீவி எண்ணையில் பொறிக்கவும். நல்ல வெள்ளை வெளேரென்று க்ரிஸ்பியாக வரும். எடுத்து மிளகு சீரகப் பொடி., அல்லது சிகப்பு மிளகாய்த்தூள் ., உப்போடு சேர்த்து தூவி கலவை சாதம். புலவுடன் பரிமாறவும். மாலை நொறுக்ஸாகவும் கொடுக்கலாம்..

திங்கள், 17 ஜனவரி, 2011

CABBAGE KUUTTU.. முட்டைக்கோஸ் கூட்டு..

CABBAGE KUUTTU:-
NEEDED:-
CABBAGE - 20 GMS
GREEN GRAM DHAL - 1 CUP
ONION - 1 CHOPPED
GREEN CHILLY - 1 HALVED
JEERA - 1 TSP
ORID DHAL - 1 TSP
CURRY LEAVES - 1 ARK
SALT - 1/2 TSP
OIL - 1 TSP

METHOD :-
WASH DHAL AND PLACE IT IN COOKER. WASH AND CHOP CABBAGE . ADD CABBAGE ., ONION ., 1/2 TSP JEERA, GREEN CHILLY WITH DHAL. ADD HALF CUP WATER. COOK FOR 2 WHISTLES AND OFF THE GAS. AFTER 10 MINUTES OPEN THE LID . HEAT OIL IN A PAN TOSS URAD DHAL., JEERA AND CURRY LEAVES AND POUR IT IN THE KUUTTU . ADD SALT AND MIX WELL WITH A LADDLE.. SERVE IT WITH RICE AND GHEE ., OR AS A SIDE DISH FOR VATHAKKUZAMBU RICE. , OR WITH CHAPPATHIS.

முட்டைக்கோஸ் கூட்டு :-
தேவையானவை :-
முட்டைக்கோஸ் - 250 கிராம்
பாசிப்பருப்பு - 1 கப்
பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது
பச்சை மிளகாய் - 1 ரெண்டாக வகிர்ந்தது
ஜீரகம் - 1 டீஸ்பூன்
உளுந்து _ 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை :-
பாசிப்பருப்பை கழுவி குக்கரில் போடவும். முட்டைக்கோஸைக் கழுவி நைஸாக அரிந்து வெங்காயம்., பச்சைமிளகாய்., 1/2 டீஸ்பூன் ஜீரகம்., 1/2 கப் தண்ணீர் விட்டு 2 விசில் வரும்வரை வேகவிடவும். அடுப்பை அணைத்து 10 நிமிடம் கழித்து குக்கரைத் திறந்து உப்பு போடவும். பானில் எண்ணெயைக் காயவைத்து உளுந்து., சீரகம் ., கருவேப்பிலை தாளித்து கூட்டில் கொட்டி நன்கு கலக்கவும். சூடாக சாதம் நெய்யுடன் அல்லது வத்தக் குழம்பு சாதத்துக்கு தொட்டுக் கொள்ளலாம்.. சப்பாத்தியுடனும் பரிமாறலாம்.

புதன், 12 ஜனவரி, 2011

KOZHUKKATTAI.. ஆட்டிக்கிண்டும் கொழுக்கட்டை..

KOZHUKKATTAI..:_
NEEDED:-
IDLY RICE - 2 CUP
CRATED COCONUT - 1 CUP
CHOPPED ONION - 1/2 CUP
RED CHILLIES - 4 MAKE INTO TITBITS WITHOUT SEEDS.
CURRY LEAVES - 1 ARK
SALT - 1 TSP
ORID DHAL - 1 TSP
JEERA - 1/2 TSP
OIL - 3 TSP.

METHOD :-
WASH AND SOAK IDLY RICE FOR 2 HOURS. GRIND COARSLY. HEAT OIL IN A PAN ADD ORID DHAL., JEERA., RED CHILLIES., CURRY LEAVES. THEN ADD ONION AND SAUTE WELL. ADD THE BATTER WITH SALT . STIRR WELL FOR 5 MINUTES. WHEN IT BECOMES THICK AND NON STICKY ADD CRATED COCONUT . OFF THE GAS AND MIX WELL . MAKE KOZHUKKATTAIS IN LEMON SIZE AND HOLD THEM TIGHTLY IN HAND TO MAKE OVAL KOZHUKKATTAIS. STEAM THEM IN IDLY COOKER FOR 20 MINUTES. SERVE HOT WITH VENGKAAYA CHUTNEY OR MILAKAAY CHUTNEY OR PORICHUKOTITH THUVAIYAL.

ஆட்டிக் கிண்டும் கொழுக்கட்டை:-
*****************************************
இட்லி அரிசி - 2 கப்
துருவிய தேங்காய் - 1 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1/2 கப்
வரமிளகாய் - 4 விதை நீக்கி சின்னதாக வெட்டவும்.
கருவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்.
எண்ணெய் - 3 டீஸ்பூன்.

செய்முறை :-
இட்லி அரிசியை கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். கொரகொரப்பாக அரைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து உளுந்து., சீரகம்., வரமிளகாய்., கருவேப்பிலை போடவும். வெங்காயம் போட்டு நன்கு வதக்கி மாவை ஊற்றவும். உப்பு சேர்க்கவும். 5 நிமிடம் நன்கு கிளறி கையில் ஒட்டாமல் வரும்போது தேங்காய்த்துருவல் சேர்க்கவும். அடுப்பை அணைத்து மாவை கையால் நன்கு பிசைந்து எலுமிச்சை உருண்டைகளாகவும் பிடி கொழுக்கட்டைகளாகவும் பிடித்து ஆவியில் 20 நிமிடம் வேகவிடவும். சூடாக வெங்காயச் சட்னி., மிளகாய் சட்னி., பொரிச்சுக்கொட்டித் துவையலோடு பரிமாறவும்.

சனி, 8 ஜனவரி, 2011

DONGER CHUTNEY.. டாங்கர் சட்னி..


DONGER CHUTNEY:-
NEEDED :-
SMALL ONION - 200 GMS
GARLIC - 50 GMS
TOMATO - 1 NO ( OPTIONAL)
RED CHILLIES - 8 NOS ( MAKE INTO TITBITS)
TAMARIND - 1 AMLA SIZE BALL
SALT - 1 TSP
JAGGERY - 1 TSP.
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
OIL - 1 TBLSPN
METHOD :-
HEAT OIL IN A PAN ADD MUSTARD., WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN ADD RED CHILLIES . THEN ADD PEELED CHOPPED ONION., GARLIC AND TOMATO . SAUTE WELL. SOAK TAMARIND IN HALF CUP WATER AND TAKE THE PULP . POUR THE PULP WITH SALT IN THE PAN. BRING TO BOIL . COOK IN SIM FOR 5 MIN ADD JAGGERY.. COOK TILL OIL SEPERATES . SERVE HOT WITH IDDLIES OR DOSAS.
ITS A CHETTINAD SPECIAL AND SERVED IN NIGHT DINNERS.
டாங்கர் சட்னி:-
தேவையானவை:-
சின்ன வெங்காயம் - 200 கிராம்
வெள்ளைப்பூண்டு - 50 கிராம்
தக்காளி - 1 ( விரும்பினால்)
வரமிளகாய் - 8 (துண்டுகளாக்கியது)
புளி - 1 நெல்லி அளவு
உப்பு - 1 டீ்ஸ்பூன்
தூள் வெல்லம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.
தக்காளி - 1 ( விரும்பினால்)
புளி - 1 எலுமிச்சை அளவு
உப்பு - 1 டீஸ்பூன்.
செய்முறை :-
பானில் எண்ணெய் ஊற்றி கடுகு போடவும். வெடித்தவுடன் உளுந்து போட்டு சிவந்தவுடன் வரமிளகாய் போடவும். பின்பு தோலுரித்து பொடியாக அரிந்த சின்ன வெங்காயம்., வெள்ளைப் பூண்டு ., தக்காளி போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் புளியை அரை டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து சாறெடுத்து உப்புடன் சேர்த்து ஊற்றவும். கொதிவந்ததும் அடக்கி வைத்து 5 நிமிடம் கழித்து வெல்லம் சேர்க்கவும். பக்கங்களில் எண்ணெய் பிரியும் வரை அடுப்பில் வைக்கவும். சூடாக இட்லி தோசையுடன் பரிமாறவும்.
இது செட்டிநாடு ஸ்பெஷல். திருமணட்துக்கு முந்தைய நாள் இரவு அல்லது திருமணத்தன்று பெண் அழைப்பில் இட்லியுடன் இதை பரிமாறுவார்கள்.

வெள்ளி, 7 ஜனவரி, 2011

BEETROOT VADAI.. பீட்ரூட் வடை..

BEETROOT VADAI:-
NEEDED:-
BEET ROOT - 2 NOS ( PEELED., CRATED)
THUVAR DHAL - 1/2CUP
BIG ONION - 1 ( CHOPPED)
RED CHILLIES - 4 NOS.
SOMPH - 1 TSP
COCONUT - 2 INCH PIECE
CURRY LEAVES - 2 ARK
SALT - 1/2 TSP
OIL - FOR FRYING.

METHOD:-
WASH AND SOAK THUVAR DHAL FOR 2 HOURS. DRAIN THE WATER . GRIND REDCHILLIES., SOMPH.,CURRY LEAVES., COCONUT., THUVAR DHALL COARSLY. ADD SALT., BEETROOT., ONION . MIX WELL. MAKE VADAS ADN DEEP FRY IN OIL. SERVE HOT AS EVENING SNACK ., OR WITH SAMBAR RICE ., RASAM RICE., MORKUZAMBU RICE AND CURD RICE.


பீட்ரூட் வடை:-
தேவையானவை :-
பீட்ரூட் - 2 ( தோல் சீவி துருவியது).
துவரம் பருப்பு - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது.
வரமிளகாய் - 4
சோம்பு - 1 டீஸ்பூன்
தேங்காய் - 2 இன்ச் துண்டு
கருவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு.

செய்முறை:-
துவரம்பருப்பை கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து வரமிளகாய்., சோம்பு., தேங்காய்., கருவேப்பிலையுடன் கொரகொரப்பாக அரைக்கவும். பீட்ரூட் துருவல்., வெங்காயம் உப்பு சேர்த்து நன்கு பிசையவும். வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொறித்தெடுக்கவும். சூடாக மாலை டீயுடன் பரிமாறவும். அல்லது சாம்பார் சாதம்., ரசம் சாதம்., மோர்க்குழம்பு சாதம்., தயிர் சாதத்துடன் தொட்டுக் கொள்ளலாம்.

வியாழன், 6 ஜனவரி, 2011

EGG GARLIC MASALA.. முட்டை பூண்டு மசாலா..

EGG GARLIC MASALA:-
NEEDED:-
BOILED EGGS - 2 NOS
CHOPPED ONION - 1 CUP
CHOPPED TOMATO - 1 CUP
GARLIC PEELED - 20 PODS.
RED CHILLI POWDER - 1 TSP
TURMERIC POWDER - 1 PINCH
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
OIL - 3 TSP.

METHOD :-
HEAT OIL IN A PAN ADD MUSTARD . WHEN IT SPLUTTRS ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN ADD ONION., GARLIC AND TOMATO. SAUTE WELL. ADD CHILLI POWDER AND TURMERIC. ADD EGGS. STIR WELL AND COOK TILL OIL SEPERATES AT THE SIDES. SERVE HOT WITH ROTI., NAAN., CHAPPATHI., BARATHA., PLAIN RICE ., SAMBAR RICE., OR PULAO.

முட்டை பூண்டு மசாலா..:-
தேவையானவை.:-
அவித்த முட்டை - 2
நறுக்கிய வெங்காயம் - 1 கப்
நறுக்கிய தக்காளி - 1 கப்
வெள்ளைப் பூண்டு உரித்தது - 20.
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்

செய்முறை :-
பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகுபோடவும். வெடித்தவுடன் உளுந்து போடவும். அது ப்ரவுன் ஆனவுடன் வெங்காயம்., பூண்டு., தக்காளி போடவும். உப்பு ., மிளகாய்ப் பொடி சேர்த்து., முட்டைகளை சேர்க்கவும். நன்கு கலக்கி ஓரங்களில் எண்ணெய் பிரியும்வரை சமைக்கவும். சூடாக., ரொட்டி., நான்., சப்பாத்தி., பராத்தா., சாதம்., சாம்பார் சாதம்., புலவுடன் பரிமாறவும்.

செவ்வாய், 4 ஜனவரி, 2011

AAPPAM.. COCONUT MILK.. ஆப்பம் .. தேங்காய்ப்பால்..



AAPPAM..:-
RAW RICE - 1 CUP
BOILED RICE (IDDLIE RICE ) - 1 CUP
ORID DHAL - 1/2 CUP
FENUGREEK - 2 TSP
SALT - 1/2 TSP

METHOD :-
WASH AND SOAK ALL TOGETHER FOR 2 HOURS. GRIND WELL. ADD SALT AND KEEP IT ASIDE FOR 10 HOURS TO FERMENTS. RUB THE AAPPAM PAN WITH A OILED CLOTH AND POUR ONE LADDLE OF BATTER . TAKE THE PAN FROM FIRE AND REVOLVE IT OR ROTATE TO SPEAD THE BATTER . THEN KEEP IT IN STOVE COVER IT WITH A LID . AFTER ONE MINUTE REMOVE THE LID AND TAKEOUT THE AAPPAM FROM PAN AND SERVE IT WITH COCONUT MILK OR COCONUT CHUTNEY.

FOR THE PREPARATION OF COCONUT MILK SCRAP ONE FULL COCONUT ., GRIND IT WELL IN A MIXIE . POUR 2 CUPS OF WATER AND FILTER THAT. ADD 2 TBLSPNS OF SUGAR AND ELACHI POWDER.

ஆப்பம்:-
பச்சரிசி - 1 கப்
புழுங்கல் அரிசி ( இட்லி அரிசி) - 1 கப்
உளுந்து - 1/2 கப்
வெந்தயம் - 2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை :-
அரிசிகள்., உளுந்து., வெந்தயத்தை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். நன்கு அரைத்து உப்பு போட்டு கரைத்து வைக்கவும். 10 மணி நேரம் புளிக்க விடவும். ஆப்பக்கல்லை எண்ணைத் துணியால் துடைத்து ஒரு கரண்டி மாவை ஊற்றி கல்லை அடுப்பிலிருந்து எடுத்து அப்படியே ஸ்லாத்தவும். அல்லது சுற்றவும். மாவு எல்லாப் பக்கங்களிலும் சரியாக பரவும்.. அடுப்பில் வைத்து மூடி போட்டு ஒரு நிமிடம் வேக விடவும். மூடியை திறந்து ஆப்பத்தை எடுத்து தேங்காய்ப் பால்., அல்லது சட்னியுடன் பரிமாறவும்.

ஒரு முழுத்தேங்காயைத் திருகி மிக்சியில் அரைத்து 2 கப் தண்ணீர் ஊற்றிப் பாலெடுத்து வடிகட்டி ., 2 டேபிள்ஸ்பூன் சீனியும் ., பொடித்த ஏலக்காயும் போடவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...