எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 27 டிசம்பர், 2011

AUBERGINE CURRY. எண்ணெய்க் கத்திரிக்காய் கறி.


AUBERGINE CURRY:-
NEEDED:-
AUBERGINE - 250 GMS
RED CHILLY POWDER - 2 TSP
SALT - 1/2 TSP
OIL - 1 TABLESPN
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
FENNEL - 1/3 TSP

METHOD:-
WASH AND CUT THE AUBERGINES IN LENGTHWISE. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL AND FENNEL. THEN ADD THE AUBERGINES AND SAUTE WELL. ADD THE SALT AND CHILLY POWDER. STIRR OCCASIONALLY. KEEP THE STOVE IN SIM AND COVER THE PAN WITH A LID. COOK TILL OIL SEPERATES AT THE SIDES. SERVE HOT WITH SAMBAR RICE /CURD RICE.


எண்ணெய்க் கத்திரிக்காய்க் கறி:-
தேவையானவை:-
கத்திரிக்காய் - 250 கி
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - 1/3 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/3 டீஸ்பூன்

செய்முறை:-
கத்திரிக்காய்களை நீளவாக்கில் அரிந்து தண்ணீரில் கழுவவும். பானில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, சோம்பு போட்டு வெடித்தவுடன் கத்திரிக்காய்களைச் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் மிளகாய்ப் பொடி, உப்பு போட்டு நன்கு கிளறி ஒரு மூடி போட்டு மூடி அடுப்பை சிம்மில் வைக்கவும். அவ்வப்போது திருப்பி விடவும். ஓரங்களில் எண்ணெய் பிரிந்ததும் இறக்கி சாம்பார் சாதம்/தயிர்சாதத்துடன் பரிமாறவும்.

புதன், 7 டிசம்பர், 2011

CAULIFLOWER SOUP. காலிஃப்ளவர் சூப்.

CAULIFLOWER SOUP:-
NEEDED:-

CAULIFLOWER - 10 FLORETS

BOILED THUVAR THAL - 1 TBLSPN

BIG ONION - 1 NO CHOPPED

TOMATO - 1 NO CHOPPED.

GREEN CHILLY - 1 NO SLIT OPEN

TURMERIC POWDER - 1 PINCH.

OIL OR GHEE - 2 TSP

ORID DHAL - 1/2 TSP

FENNEL - 1/3 TSP

JEERA - 1/2 TSP

PEPPER - 1 TSP

BAY LEAF - 1 INCH

CINNAMON - 1 INCH

KALPASIPPUU - 1 INCH

CARDAMOM - 1 NO

CURRY LEAVES - ONE ARK

MILK - 1 TBL SPN.

SALT - 1 TSP.

CHOPPED CORRIADER LEAVES - 1 TSP


METHOD :-

IMMERSE THE FLORETS IN SALTED HOT WATER FOR 10 MINUTES. DRAIN AND KEEP ASIDE. HEAT OIL OR GHEE IN A PAN ADD ORID DHAL, FENNEL, JEERA, PEPPER, CINNAMON, CARDAMOM, KALPASIPPUU, BAY LEAF. AFTER A MINUTE ADD CHOPPED ONION, TOMATO, FLORETS, CURRY LEAVES AND GREEN CHILLY. SAUTE WELL. SMASH THE DHALL ADD 3 CUPS OF WATER AND POUR IT WITH SALT & TURMERIC POWDER IN THE CONTENTS OF PAN. BRING TO BOIL . COVER IT WITH A LID & COOK FOR 7 MINUTES IN SIM. ADD MILK AND DECORATE WITH CORRIANDER LEAVES AND SERVE HOT WITH RICE CHIPS .


காலிஃப்ளவர் சூப்:-

தேவையானவை:-

காலிஃப்ளவர் - 10 துண்டு பூக்கள்

வேகவைத்த துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

பெரிய வெங்காயம் - 1 நீளமாக நறுக்கவும்

தக்காளி - 1 துண்டுகளாக்கவும்.

பச்சை மிளகாய் - 1 இரண்டாக வகிரவும்.

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

எண்ணெய் /நெய் - 2 டீஸ்பூன்

உளுந்து - 1/2 டீஸ்பூன்

சோம்பு - 1/3 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

பட்டை - 1 இன்ச்

இலை - இன்ச்

கல்பாசிப்பூ - 1 இன்ச்

ஏலக்காய் - 1

கருவேப்பிலை - 1 இணுக்கு.

கொத்துமல்லி தழை - 1 டீஸ்பூன்.

உப்பு - 1 டீஸ்பூன்

பால் - 1 டேபிள் ஸ்பூன்.


செய்முறை:-

உப்பு போட்ட கொதி நீரில் காலிஃப்ளவர்கள் மூழ்கும்படி 10 நிமிடம் வைக்கவும். பின் நீரை வடித்து தனியாக வைக்கவும். ஒரு பானில் எண்ணெய்/ நெய் ஊற்றி உளுந்து, சோம்பு, சீரகம்., மிளகு, கல்பாசிப்பூ., பட்டை., இலை., ஏலக்காய் போட்டு தாளிக்கவும். அதில் வெங்காயம், தக்காளி., கருவேப்பிலை., பச்சை மிளகாய், காலிஃப்ளவர் போட்டு நன்கு வதக்கவும். துவரம்பருப்பை நன்கு மசித்து 3 கப் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பானில் ஊற்றவும். கொதி வந்ததும் சிம்மில் மூடி போட்டு 7 நிமிடம் வேக விடவும். பால் ஊற்றி கொத்துமல்லித்தழை சேர்த்து வறுத்த அரிசி வத்தல்களுடன் பரிமாறவும்.

புதன், 23 நவம்பர், 2011

MEALMAKER MASALA. மீல்மேக்கர் மசாலா.

MEALMAKER MASALA:-

RECIPE:-

SOYA CHUNKS - 100 GRAMS

BIG ONION - 2 NO. CHOPPED

TOMATO - 1 NO.CHOPPED

GARLIC - 4 PODS CHOPPED

CHILLI POWDER - 1 TSP

DHANIYA POWDER - 1 TSP

TURMERIC POWDER - 1 PINCH.

GARAM MASALA POWDER - 1/4 TSP ( OPTIONAL)

SALT - 1/2 TSP

OIL - 1 TBLSPN.

MUSTARD - 1 TSP

ORD DHAL - 1 TSP

FENNEL - 1/2 TSP

BAY LEAF - 1 INCH

CINNAMON - 1 INCH


PROCEDURE:-

SOAK SOYA CHUNKS IN HOT WATER ( WITH HALF TEASPOON SALT) FOR 10 MINUTES . WASH IT IN COLD WATER FOR THRICE AND SQUEEZE WELL. CUT THEM IN TO TWO AND KEEP ASIDE. HEAT OIL IN A PAD ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL AND FENNEL. THEN ADD THE BAY LEAF AND CINNAMON. ADD ONION., GARLIC., TOMATO AND SAUTE WELL. ADD ALL THE MASALA POWDERS AND SALT. THEN ADD THE SOYA CHUNKS SAUTE FOR 2 MINUTES. COVER THE VESSEL WITH A LID AND COOK TILL ALL THE MASALA IS ABSORBED BY THE SOYA CHUNKS. SERVE IT WITH CHAPPATHIS AND VARIETY RICES.


மீல்மேக்கர் மசாலா.

தேவையானவை:-

சோயா சங்க்ஸ் ( உருண்டைகள்) -100 கி.

பெரிய வெங்காயம் - 2 பொடியாக நறுக்கவும்

தக்காளி - 1 பொடியாக நறுக்கவும்

பூண்டு - 4 பல் உரித்து நறுக்கவும்.

மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன்

தனியா பொடி - 1 டீஸ்பூன்

மஞ்சள் பொடி - 1 சிட்டிகை

கரம் மசாலா பொடி - 1/4 டீஸ்பூன் தேவைப்பட்டால்.

உப்பு - 1/2 டீஸ்பூன்

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்து - 1 டீஸ்பூன்

சோம்பு - 1/2 டீஸ்பூன்

பட்டை இலை - 1 இன்ச் துண்டு

பட்டை - 1 இன்ச்.


செய்முறை:-

சோயா சங்க்ஸை சிறிது உப்பு சேர்த்த கொதிநீரில் போட்டு மூடவும். பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் நன்கு அலசி 3 முறை கழுவிப் பிழிந்து இரண்டாக நறுக்கி வைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் சோம்பு போட்டு பின் பட்டை., இலை போடவும். பின் வெங்காயம்., பூண்டு., தக்காளி போட்டு நன்கு வதக்கி எல்லா மசாலா பொடிகளையும்., உப்பையும் சேர்க்கவும். இதில் சோயாவைப் போட்டு நன்கு கிளறி மூடி போட்டு வேக விடவும். எல்லா மசாலாவும் சோயாவில் உறிஞ்சப்பட்டபின் இறக்கி பரிமாறவும். இதை சப்பாத்தி கலவை சாதங்களுக்கு பரிமாறலாம்.

ஞாயிறு, 20 நவம்பர், 2011

VENPONGAL. வெண்பொங்கல்.

VENPONGAL:-
NEEDED:-

RAW RICE - 1 CUP

GREEN GRAM DHAL( MOONG DHAL) - 1/3 CUP

GHEE - 1 TBLSPN

GREEN CHILLY - 1 NO. SLIT OPEN

GINGER - 1 INCH PIECE. CHOPPED

PEPPER - 1 TSP

JEERA - 1 TSP

ORID DHAL - 1 TSP.

CASHEWS - 15 NOS.

CURRY LEAVES - 1 ARK

JEERA PEPPER POWDER - 1/2 TSP

SALT - 1/2 TSP


METHOD:-

MIX RAW RICE AND MOONG DHAL . WASH THRICE AND DRAIN. ADD PEPPER, JEERA, GINGER AND GREEN CHILLY. POUR 4 CUPS OF WATER AND PRESSURE COOK FOR 3 WHISTLES. AFTER 10 MIN. OPEN THE LID ADD SALT AND SMASH WELL WITH LADDLE. HEAT GHEE IN A PAN ADD ORID DHAL , PEPPER , JEERA , CASHEW AND CURRY LEAVES. WHEN SPLUTTERS POUR THIS INTO THE PONGAL. ADD PEPPER JEERA POWDER AND STIRR WELL. IF DESIRED ADD SOME MORE GHEE AND SERVE HOT WITH SMALL ONION SAMBAR AND COCONUT CHUTNEY.


வெண்பொங்கல்:-

செய்முறை:-

பச்சரிசி - 1 கப்

பாசிப்பருப்பு - 1/3 கப்

நெய் - 1 டேபிள்ஸ்பூன்

பச்சைமிளகாய் - 1 இரண்டாக வகிரவும்.

இஞ்சி - 1 இஞ்ச் துண்டு பொடியாக நறுக்கவும்.

மிளகு - 1 டீஸ்பூன்

ஜீரகம் - 1 டீஸ்பூன்

உளுந்து - 1 டீஸ்பூன்

முந்திரிப் பருப்பு - 15 ( முழு)

கருவேப்பிலை - 1 இணுக்கு

மிளகு ஜீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்.

உப்பு - 1/2 டீஸ்பூன்.


செய்முறை:-

பச்சரிசி, பாசிப்பருப்பை சேர்ந்த்து 3 முறை நன்கு களைந்து தண்ணீரை வடித்து வைக்கவும். மிளகு, சீரகம்., இஞ்சி., பச்சைமிளகாயை சேர்க்கவும். 4 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும்வரை குக்கரில் வைக்கவும். 10 நிமிடம் கழித்து திறந்து உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும். ஒரு இரும்புக் கரண்டியில் எண்ணெயைக் காயவைத்து உளுந்து, சீரகம்., மிளகு, முந்திரிப் பருப்பு., கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். எல்லாம் பொறிந்தவுடன் பொங்கலில் கொட்டி மிளகு சீரகத் தூள் சேர்த்து நன்கு கிளறி , தேவைபட்டால் இன்னும் சிறிது நெய் சேர்த்து சூடாக சின்ன வெங்காய சாம்பார், தேங்காய்ச் சட்னியோடு பரிமாறவும்.

புதன், 16 நவம்பர், 2011

GREEN CHILLY THUVAIYAL. பச்சை மிளகாய்த் துவையல்.

GREEN CHILLY THUVAIYAL:-

NEEDED:-

GREEN CHILLIES - 8 NOS.

SMALL ONION - 10 NOS,

TAMARIND - 1 AMLA SIZE BALL

SALT - 1/2 TSP

ASAFOETIDA - 1/10 INCH.

OIL - 2 TSP

MUSTARD - 1 TSP

ORID DHAL - 1 TSP


METHOD:-

PEEL AND WASH SMALL ONIONS. WASH CHILLIES. ADD ALL THE INGREDIENTS (EXCEPT OIL, MUSTARD AND ORID DHAL ) AND GRIND WELL. HEAT OIL IN A IRON LADDLE ADD MUSTARD. WHEN IT SLPUTTERS ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN POUR THIS INTO THE THUVAIYAL. SERVE IT WITH HOT IDDLIES AND DOSAS.


பச்சை மிளகாய் துவையல்:-

தேவையானவை:-

பச்சை மிளகாய் - 8

சின்ன வெங்காயம் - 10

புளி - நெல்லி அளவு.

உப்பு - 1/2 டீஸ்பூன்

பெருங்காயம் - 1/10 இஞ்ச்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்து - 1 டீஸ்பூன்.

செய்முறை:-

சின்னவெங்காயத்தைத் தோலுரித்துக் கழுவவும். பச்சைமிளகாய்களையும் கழுவவும். எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ( எண்ணெய்., கடுகு, உளுந்து தவிர்த்து) நன்கு அரைக்கவும். ஒரு இரும்புக் கரண்டியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் துவையலில் கொட்டி கிளறவும். சூடான இட்லிகளோடும் தோசைகளோடும் பரிமாறவும்.


காரம் அதிகமானால் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடவும்.:)

செவ்வாய், 8 நவம்பர், 2011

ALOO GOBI. ஆலு கோபி.(சுக்கா சப்ஜி)

ALOO GOBI:-
NEEDED:-

POTATO - 2 NOS

CAULIFLOWER - 1 NO. SMALL

OIL - 3 TSP

JEERA - 1/2 TSP

JEERA POWDER - 1/2 TSP

RED CHILLI POWDER - 1 TSP

GARAM MASALA POWDER + AMCHOOR POWDER - 1/2 TSP

SALT - 1/2 TSP


METHOD:-

WASH , PEEL AND CUT THE POTATOS LIKE FOR FRENCH FRIES. SEPERATE THE FLORETS AND IMMERSE THEM IN HOT AND SALTED WATER FOR 5 MINUTES. TAKE OUT FROM WATER AND KEEP ASIDE. HEAT OIL IN A PAN ADD JEERA., THEN ADD THE ALOO AND GOBI. SAUTE FOR 2 MINUTES. ADD JEERA POWDER., RED CHILLI POWDER., GARAM MASALA POWDER., AMCHOOR POWDER AND SALT. STIRR WELL. AND KEEP COVERED. COOK IN SIM FOR 7 MINUTES AND SERVE HOT WITH ROTIES ., NAAN., OR KULCHAS.


ஆலு கோபி:-

தேவையானவை:-

உருளைக்கிழங்கு - 2

காலிஃப்ளவர் - 1 சிறியது

எண்ணெய் - 3 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் + ஆம்சூர் பொடி - 1/2 டீஸ்பூன்

உப்பு - 1/2 டீஸ்பூன்.


செய்முறை:-

உருளையை தோலுரித்து கழுவி விரல் அளவு துண்டுகளாக்கவும். காலிஃப்ளவரை பூக்களாய்ப் பிரித்து உப்பு கலந்த வெந்நீரில் போட்டு 5 நிமிடம் வைக்கவும். தண்ணீரை வடித்து பூக்களை தனியாக வைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து சீரகம் போடவும். பொறிந்ததும் உருளை , காலிஃப்ளவரைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். சீரகப்பொடி., மிளகாய்ப்பொடி., கரம் மசாலா பொடி., ஆம்சூர் பொடி., உப்பு சேர்த்து நன்கு கிளறி மூடி போட்டு சிம்மில் 7 நிமிடம் வேகவைத்து சூடாக சப்பாத்தி., ரொட்டி., நான்., குல்ச்சாக்களுடன் பரிமாறவும்.

செவ்வாய், 1 நவம்பர், 2011

KEEMA MASALA. கைமா( கொத்துக்கறி மசால்)

KEEMA MASAL:-

NEEDED:-

KEEMA - 250 GMS

PARABOILED CHANNA DHAL - 1 CUP

CHOPPED ONION - 1 CUP

CHOPPED TOMATO - 1/2 CUP

CHOPPED GARLIC - 1 TSP

CHILLI POWDER - 2 TSP

TURMERIC POWDER - 1 PINCH

CORRIANDER POWDER - 1 TSP

SALT - 1/2 TSP

OIL - 1 TBLSPN

ORID DHAL - 1/2TSP

FENNEL - 1/2 TSP

KALPASIPPU - 1

BAY LEAF - 1 INCH

CINNAMON - 1 INCH

CLOVES - 2 NOS.


METHOD:-

WASH AND PRESSURE COOK THE MEAT . HEAT OIL IN A PAN ADD ORID DHAL, FENNEL, CLOVES, KAPASIPPU, BAY LEAF AND CINNAMON. ADD CHOPPED ONION ., GARLIC AND TOMATO. SAUTE WELL. ADD ALL THE MASALA POWDERS. STIRR WELL. ADD THE COOKED MEAT AND CHANNA DHAL WITH SALT. SAUTE WELL AND ADD I/2 CUP WATER. KEEP COVERED AND COOK FOR 10 MINUTES IN A SLOW FIRE. STIRR OCCASSIONALLY. WHEN THE OIL SEPERATES AT THE SIDES REMOVE FROM FIRE AND SERVE IT WITH RICES AND CHAPPATHIS AND NAANS. WE CAN USED TO MAKE IT FOR STUFFED PAROTTAS AND FOR PUFFS AND SAMOSAS.


கைமா மசால்:-

தேவையானவை :-

கைமா ( கொத்துக்கறி ) - 250 கிராம்

வேகவைத்த கடலைப் பருப்பு - 1 கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்

பொடியாக நறுக்கிய தக்காளி - 1/2 கப்

பொடியாக நறுக்கிய பூண்டு - 1டீஸ்பூன்

வரமிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

மல்லித்தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - 1/2 டீஸ்பூன்

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

உளுந்து - 1/2 டீஸ்பூன்

சோம்பு - 1/4 டீஸ்பூன்

கல்பாசிப்பூ - 1

பட்டை இலை - 1 இன்ச்

பட்டை - 1 இன்ச்

கிராம்பு - 2.


செய்முறை:-

மட்டன் கைமாவை நன்கு கழுவி பிரஷர் குக்கரில் வேக வைக்கவும். பானில் எண்ணெய் ஊற்றி உளுந்து., சோம்பு, பட்டை, இலை, கிராம்பு, கல்பாசிப்பூ போட்டுத் தாளிக்கவும். வெங்காயம்., தக்காளி., பூண்டு போட்டு நன்கு வதக்கவும். எல்லா மசாலா பொடியும் போட்டு நன்கு வதக்கியவுடன் மட்டன்., கடலைப் பருப்பு, உப்பு சேர்க்கவும். நன்கு கிளறி அரை கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மென்தணலில் பத்து நிமிடம் வேகவிடவும். தண்ணீர் சுண்டி பக்கங்களில் எண்ணெய் பிரிந்ததும் இறக்கி சூடாக சாதம்., சப்பாத்தி, நான் ஆகியவற்றோடு பரிமாறவும். இதை வைத்து ஸ்டஃப்ட் பரோட்டாக்கள்., சமோசா., பஃப்ஸ்கள் செய்யலாம்.

வெள்ளி, 28 அக்டோபர், 2011

CABBAGE PIRATTAL. முட்டைக்கோஸ் பிரட்டல்.

CABBAGE PIRATTAL:-

NEEDED:-

CABBAGE - 250 GMS CHOPPED INTO SQUARES.

PARABOILED CHANNA DHAL - 1 CUP

BIG ONION - 1 NO CHOPPED

TOMATO - 1 NO CHOPPED.


TO GRIND :-

RED CHILLIES - 6 NOS

FENNEL - 1/2 TSP

JEERA - 1/4 TSP

SMALL ONION - 2 NOS

GARLIC - 1 POD .

GRATED COCOUT 1 TSP + FRIED CHANA GRAM 1TSP OPTIONAL.

SALT - 1/2 TSP


FOR FRYING:-

MUSTARD - 1 TSP

ORID DHAL - 1 TSP

FENNEL - 1/4TSP

OIL - 1 TBLSPN.


METHOD :-

GROUND THE MASALA WITH LITTLE WATER. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN ADD FENNEL ., THEN CHOPPED ONION AND TOMATO. SAUTE FOR A MINUTE AND ADD THE GROUND MASALA . SAUTE THE MASALA WELL AND ADD THE CABBAGE . STIRR WELL. KEEP COVERED AND COOK FOR SOME TIME. STIRR OCCASSIONALLY. ADD PARABOILED CHANNA DHAL AND STIRR WELL. COVER WITH LID AND COOK FOR SOME TIME . STIRR WELL WITH MASALAS. WHEN OIL SEPERATES AT THE SIDES REMOVE FROM FIRE AND SERVE IT WITH SAMBAR RICE & CURD RICE., CHAPPATHIS.


முட்டைக்கோஸ் பிரட்டல்:-

தேவையானவை:-

முட்டைக்கோஸ் - 250 கிராம் சதுரமாக அரியவும்.

முக்கால் பதம் வேகவைத்த கடலைப் பருப்பு - 1 கப்

பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரியவும்.

தக்காளி - 1 பொடியாக அரியவும்.


அரைக்க:-

வரமிளகாய் - 6

சோம்பு - 1/2 டீஸ்பூன்

சீரகம் - 1/4 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் - 2

பூண்டு - 1 பல்

துருவிய தேங்காய் 1 டீஸ்பூன் + பொட்டுக்கடலை 1 டீஸ்பூன் காரம் குறைவாக விரும்பினால் சேர்க்கவும்.

உப்பு - 1/2 டீஸ்பூன்


தாளிக்க:-

கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்து - டீஸ்பூன்

சோம்பு - 1/4 டீஸ்பூன்.
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:-

மசாலாவை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும், உளுந்து போட்டு சிவந்ததும், சோம்பு போடவும். பின் வெங்காயம்., தக்காளி போட்டு, வதக்கி மசாலாவை நன்கு வதக்கவும். அதில் முட்டைக்கோசைச் சேர்த்து நன்கு கிளறி மூடி போட்டு வேக விடவும். அதில் கடலைப்பருப்பை சேர்க்கவும். நன்கு கிளறி மூடி போட்டு வேக விடவும். மசாலாவை அவ்வப்போது நன்கு சேரும்படி கரண்டியால் கிண்டவும். நன்கு வெந்து பக்கங்களில் எண்ணெய் பிரியும் போது இறக்கி சாம்பார் சாதம் , தயிர்சாதம் சப்பாத்தியுடன் பரிமாறவும்.

வெள்ளி, 21 அக்டோபர், 2011

CARROT HALWA. காரட் ஹல்வா.

CARROT HALWA :-

NEEDED :-

CARROT - 250 GMS

SUGAR - 1 CUP

GHEE - 2 TBLSPNS.

MILK - 1/2 CUP OR MILK MAID - 2TBLSPN

CASHEWS - 10 NOS.


METHOD :-

WASH AND GRATE CARROTS. HEAT OIL IN A TAWA FRY CASHEWS TO GOLDEN BROWN AND KEEP ASIDE. TO THIS GHEE ADD GRATED CARROT , SAUTE FOR 3 MINUTES. WHEN COLOUR CHANGES ADD MILK OR MILK MAID. STIRR WELL. KEEP COVERED FOR 2 MINUTES . WHEN TENDER ADD SUGAR . FURTHER COOK FOR 10 MINUTES TILL GHEE SEPERATES AT THE SIDES. ADD CASHEWS STIRR WELL AND TRANSFER IT INTO A BOWL. SERVE HOT WITH VANILA ICECREAM.


காரட் ஹல்வா:-

தேவையானவை:-

காரட் - 250 கி

ஜீனி - 1 கப்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

பால் - 1/4 கப் அல்லது மில்க் மெயிட் - 1 டேபிள் ஸ்பூன்

முந்திரி - 10


செய்முறை:-

காரட்டுக்களைத் தோல்சீவி கழுவி துருவவும். தவாவில் நெய்யைக் காயவைத்து முந்திரியைப் பொன்னிறமாகும்படி வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே நெய்யில் காரட்டை 3 நிமிடம் வதக்கவும். நிறம் மாறும்போது பால் அல்லது மில்க்மெயிடைச் சேர்க்கவும். நன்கு கிளறி மூடிபோட்டு 2 நிமிடம் வேகவிடவும். காரட் மென்மையானதும் சீனியை சேர்த்து 10 நிமிடம் நன்கு கிளறி ஓரங்களில் நெய் பிரியும்போது இறக்கி பவுலில் மாற்றவும். சூடான அல்வாவை வெனிலா ஐஸ்க்ரீமோடு பரிமாறவும்.

புதன், 19 அக்டோபர், 2011

BEETROOT SOUP. பீட்ரூட் சூப்.

BEETROOT SOUP:-
NEEDED:-
BEETROOT - 1 NO ( APP 200 GM) PEELED, WASHED & DICED.
BIG ONION - 1 NO. FINELY CHOPPED.
BIG TOMATO - 1 NO CHOPPED
BOILED THUVAR DHAL - 1 TBLSPN
OIL - 2 TSP ( OR GHEE OR DALDA)
ORID DHAL - 1 TSP
JEERA - 1/2 TSP
FENNEL - 1/2 TSP
PEPPERCORNS - 10 NOS
GREEN CHILLY - 1 SLIT OPEN
KALPASIPPOO - 1 INCH
BAY LEAF - 1 INCH
CINNAMON - 1/2 INCH PIECE
CARDAMOM - 1 NO
CURRY LEAVES - 1 ARK.
SALT - 1 TSP
FOR ADDITIONAL TASTE - 1 TSP MILK AND SOUP POWDER 1/2 TSP.

METHOD :-
HEAT OIL IN A PRESSURE PAN ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN ADD JEERA, FENNEL, PEPPERCORN, CINNAMON. CARDAMOM, BAY LEAF, KALPASIPPOO. THEN ADD CURRY LEAVES AND GREEN CHILLY. SAUTE FOR A MINUTE ADD ONION, TOMATO AND BEETROOTS. THEN ADD SALT AND SMASHED THUVAR DHAL ALONG WITH 3 CUPS OF WATER. PRESSURE COOK FOR ONE WHISTLE. REMOVE FROM FIRE ADD MILK AND SOUP POWDER.SERVE HOT WITH SOUPSTICKS.

பீட்ரூட் சூப்:-
தேவையானவை.:-
பீட்ரூட் - 1 தோலுரித்து கழுவி துண்டுகளாக்கவும்.
பெரிய வெங்காயம் - 1 குச்சியாக நறுக்கவும்.
தக்காளி - 1 பொடியாக நறுக்கவும்.
வேகவைத்த துவரம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன் ( நெய் அல்லது டால்டா)
உளுந்து - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
மிளகு - 10
கல்பாசிப்பூ - 1 இன்ச்
பட்டை - 1/2 இன்ச்
இலை - 1 இன்ச்
ஏலக்காய் - 1
பச்சைமிளகாய் - 1 இரண்டாக வகிரவும்.
கருவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு - 1 டீஸ்பூன்
மேலும் சுவைகூட்ட - 1 டீஸ்பூன் பால்+ சூப் பவுடர் 1/2 டீஸ்பூன்

செய்முறை :-
ஒரு ப்ரஷர் பானில் எண்ணெயை சூடாக்கி உளுந்து போடவும். சிவந்ததும் ஜீரகம், சோம்பு, மிளகு, பட்டை, கல்பாசிப்பூ, ஏலக்காய், இலை போடவும். பின் கருவேப்பிலை, பச்சைமிளகாய் போட்டு வெங்காயம், தக்காளி, பீட்ரூட் போட்டு வதக்கவும். உப்பும் மசித்த துவரம்பருப்பும் சேர்த்து 3 கப் தண்ணீர் ஊற்றவும். மூடி வெயிட் போட்டு ஒரு விசில் வைத்து அடுப்பை அணைக்கவும். ஆறியதும் திறந்து பாலும் சூப் பவுடரும் சேர்த்து சூப் ஸ்டிக்குகளுடன் பரிமாறவும். சாதத்திலும் ஊற்றி சாப்பிடலாம். குழந்தைகள், பெரியவர்கள், உடல்நலமற்றவர்களுக்கு நல்லது.

குறிப்பு :- கல்பாக்கத்தில் இருக்கும் என் தோழி சுதா பீட்ரூட்டை எந்த ஃபார்மில் செய்து கொடுத்தாலும் சாப்பிடுவேன் என்று சொல்வாள். இதுவும் காரட்டும் ரத்தத்திற்கு நல்லது.

சனி, 15 அக்டோபர், 2011

IDDLY PEPPER FRY. இட்லி மிளகுப் பொரியல்.

IDDLY PEPPER FRY:-

NEEDED:-

IDDLIES - 4 NOS. DICED

OIL - 2 TSP

MUSTARD - 1 TSP

ORID DHAL - 1 TSP

RED CHILLY - 1 NO. HALVED

CURRY LEAVES - 1 ARK

PEPPER JEERA POWDER - 1/2 TSP


METHOD :-

HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN ADD HALVED CHILLIES AND CURRY LEAVES. SAUTE FOR A MINUTE ADD IDDLIES AND PEPPER JEERA POWDER. STIRR WELL AND SERVE HOT .NO NEED OF SIDE DISHES.


இட்லி மிளகுப் பொரியல்:-

தேவையானவை:-

இட்லி - 4 சதுரமாக வெட்டவும்.

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்து _ 1 டீஸ்பூன்

வரமிளகாய் - 1. இரண்டாகக் கிள்ளவும்.

கருவேப்பிலை - 1 இணுக்கு

மிளகு சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்


செய்முறை:-

பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போடவும். வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும்., கருவேப்பிலை, வரமிளகாய் போடவும். இட்லியை சேர்ந்த்து மிளகு சீரகப் பொடி தூவி நன்கு கிளறி சூடாக பரிமாறவும். தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை. மிளகு காரமே போதும்.

புதன், 12 அக்டோபர், 2011

BETAL LEAF RASAM. வெற்றிலை ரசம்.

BETEL LEAF RASAM:-
NEEDED:-
BETEL LEAF - 4 NOS.
BOILED THUVAR DHAL WATER - 1 CUP.
TOMATO - 1 NO
TAMARIND - 1 AMLA SIZE BALL
SALT - 2 TSP
RED CHILLIES - 2 NOS
GARLIC - 4 PODS
TURMERIC - 1 TSP
JEERA PEPPER POWDER - 2 TSP
DHANIA POWDER - 1 TSP
OIL - 2 TSP
MUSTARD - 1 TSP
URAD DHAL - 1 TSP
JEERA - 1 TSP
FENUGREEK 1/4 TSP
CURRY LEAVES - 1 ARK
ASAFOETIDA - 1 / 8 INCH PIECE
CORRIANDER LEAVES - 1 TSP CHOPPED

METHOD:-
SOAK TAMARIND IN 4 CUPS OF WATER AND TAKE THE PULP OUT OF IT . ADD SALT AND THUVAR DHAL WATER IN IT . ADD THE SMASHED GARLIC AND TOMATO . ADD THE TURMERIC POWDER., PEPPER JEERA POWDER., DHANIYA POWDER IN IT. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD JEERA AND FENUGREEK AND ASAFOETIDA. THEN ADD THE HALVED CHILLIES AND HALVED BETEL LEAVES. SAUTE FOR A MINUTE THEN ADD THE TAMARIND PULP IN IT. BRING TO PREBOIL STAGE AND SWITCH OFF THE GAS. SERVE IT AS A SOUP OR WITH PLAIN RICE. ITS GOOD FOR SOAR THROAT AND FOR COLD.

வெற்றிலை ரசம்.
தேவையானவை:-
வெற்றிலை - 4
துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் - 1 கப்
தக்காளி - 1
புளி - 1 நெல்லி அளவு
உப்பு - 2 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
பூண்டு - 4 பல்
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
மிளகு ஜீரகப் பொடி - 2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கருவேப்பிலை- 1 இணுக்கு
பெருங்காயம் - 1 /8 இன்ச் துண்டு
கொத்துமல்லித்தழை - 1 டீஸ்பூன் நறுக்கியது

செமுறை:-
புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து உப்பு சேர்க்கவும். பருப்புத்தண்ணீரையும் சேர்க்கவும். தக்காளியைக் கரைத்து ., பூண்டை நசுக்கிப் போடவும். அதில் மிளகு ஜீரகப் பொடி., மஞ்சள் பொடி., தனியா பொடி போடவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்தவுடன் ., ஜீரகம்., வெந்தயம்., பெருங்காயம் போடவும். இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய்., வெற்றிலையைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கி கரைத்த புளித்தண்ணீரை ஊற்றவும். நன்கு நுரை கூடி வரும் போது இறக்கி சூடாக சூப் போல அருந்தக் கொடுக்கவும் அல்லது குழைவான சாத்தோடு பரிமாறவும். இது தொண்டை கரகரப்பு மற்றும் சளியை குணப்படுத்தும்.

சனி, 8 அக்டோபர், 2011

TARO FRY.சேப்பங்கிழங்கு வறுவல்.

TARO FRY:-
NEEDED:-

TARO - 1/2 KG

RED CHILLY POWDER - 2 TSP

SALT - 1 TSP

OIL - 50 ML.

MUSTARD - 1 TSP

ORID DHAL - 1 TSP

SOMPH/FENNEL - 1/4 TSP

CORN FLOUR - 1 TSP ( OPTIONAL)


METHOD:-

WASH AND PRESSURE COOK THE TARO. PEEL AND SLICE THEM. HEAT OIL IN A PAN ADD MUDTARD WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN ADD FENNEL THEN TARO. FRY FOR 3 MINUTES THEN ADD SALT AND CHILLY POWDER. STIRR WELL AND KEEP ROASTING FOR 10 MINUTES.IF U NEED MORE CRISPY THEN SPRAY CORN FLOUR AND STIRR FOR 2 MORE MINUTES. SERVE HOT WITH CURD RICE .


சேப்பங்கிழங்கு வறுவல்:-

தேவையானவை:-

சேப்பங்கிழங்கு - 1/2 கிலோ

வரமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

உப்பு - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 50 மிலி

கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்து - 1 டீஸ்பூன்

சோம்பு - 1/4 டீஸ்பூன்

சோள மாவு - 1 டீஸ்பூன் ( விரும்பினால்)


செய்முறை:-

சேப்பங்கிழங்குகளை நன்கு கழுவி பிரஷர் குக்கரில் வேக விடவும். ரொம்பக் குழைய வேண்டாம். தோலுரித்து வட்டங்களாக நறுக்கி வைக்கவும். பானில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து போட்டு சிவந்ததும், சோம்பு போட்டு சேப்பங்கிழங்குகளைப் போட்டு 3 நிமிடம் வதக்கவும். பின் உப்பு, மிளகாய்ப்பொடி போட்டு நன்கு கிளறி 10 நிமிடங்கள் தணலில் ரோஸ்ட் செய்யவும். அதிக மொறுமொறுப்புக்கு சோளமாவு தூவி இன்னும் இரண்டு நிமிடங்கள் வைக்கவும். சூடாக தயிர் சாதத்தோடு பரிமாறவும்.

செவ்வாய், 4 அக்டோபர், 2011

DOLICHOS LABLAB( FIELD BEANS) SUNDAL. ப்ரவுன் மொச்சை சுண்டல்.

DOLICHOS LABLAB SUNDAL:-
NEEDED:-
DOLICHOS LAB LAB - 1 CUP
OIL - 1 TSP
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
RED CHILLY - 1 NO HALVED
SALT - 1/2 TSP
GRATED COCONUT - 1 TBLSPN ( OPTIONAL)

METHOD:-
SOAK DOLICHOS LABLAB FOR 12 HOURS. PRESSURE COOK WITH SALT FOR 4 WHISTLES. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN ADD REDCHILLY AND LABLAB. STIRR WELL. IF DESIRES ADD GRATED COCONUT., AND SERVE HOT.

ப்ரவுன் மொச்சை சுண்டல் :-
தேவையானவை :-
ப்ரவுன் மொச்சை - 1 கப்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 1 இரண்டாக கிள்ளவும்.
உப்பு - 1/2 டீஸ்பூன்.
துருவிய தேங்காய் - 1 டேபிள்ஸ்பூன் ( விரும்பினால்)

செய்முறை:-
மொச்சையை 12 மணிநேரம் ஊறவிடவும். உப்பு., தண்ணீர் சேர்த்து ப்ரஷர் குக்கரில் 4 விசில் வரும்வரை வேகவிடவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் மிளகாய் போட்டு மொச்சை போட்டு நன்கு கிளறி விரும்பினால் தேங்காய் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

வியாழன், 29 செப்டம்பர், 2011

SNAKEGOURD RING BAJJI. புடலங்காய் ரிங் பஜ்ஜி.

SNAKEGOURD RING BAJJI:-

NEEDED:-

SNAKEGOURD - 250 GMS

MTR BAJJI BONDA MIX - 1 CUP OR

(GRAM FLOUR - 1 CUP + RICE FLOUR - 2 TSP + CORN FLOUR - 2 TSP + RED CHILLI POWDER - 1/3 TSP + RED FOOD COLOUR - 1 PINCH + SALT - 1/2 TSP)

OIL - FOR FRYING.


METHOD :-

WASH THE SNAKEGOURD , REMOVE SEEDS AND SLICE THINLY AS ROUND RINGS. MIX THE MTR MIX OR THE OTHER INGREDIENTS WITH LITTLE WATER. HEAT OIL IN A PAN AND DEEP FRY. SERVE HOT AS EVENING SNACK. OR AS SIDE DISH FOR MIXED RICES.



P.N.

PREFER LONG AND SLEEK SNAKEGOURD.



புடலங்காய் ரிங் பஜ்ஜி:-

தேவையானவை:-

புடலங்காய் - 250 கிராம்

எம் டி ஆர் பஜ்ஜி போண்டா மிக்ஸ் - 1 கப் அல்லது

( கடலை மாவு - 1 கப் + அரிசி மாவு - 2 டீஸ்பூன் + சோளமாவு - 3 டீஸ்பூன் + மிளகாய்ப் பொடி - 1/3 டீஸ்பூன் + ரெட் ஃபுட் கலர் - 1 சிட்டிகை + உப்பு - 1/2 டீஸ்பூன்)

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.


செய்முறை:-

புடலங்காய்களைக் கழுவி விதை நீக்கி மெல்லிய வளையங்களாக நறுக்கவும். எம் டி ஆர் மிக்ஸ் அல்லது மற்ற பொடிகள் அனைத்தும் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து பிசறவும். பானில் எண்ணெயைக் காயவைத்து பொரித்து எடுக்கவும். சூடாக மாலை நேர ஸ்நாக்காக கொடுக்கலாம். அல்லது கலவை சாதங்களுக்கு தொட்டுக் கொள்ளலாம்.


குறிப்பு:-

நீண்ட ஒல்லியான புடலைகள் நன்கு நறுக்க வரும்.

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

KANDHARAPPAM. கந்தரப்பம்.

KANTHARAPPAM:- NEEDED:-
RAW RICE - 2 CUPS
PARABOILED RICE - 1/4 CUP
ORID DHAL - 1/4 CUP
CHANNA DHAL - 1/8 CUP
FENUGREEK - 1 TSP
JAGGERY - 2 CUPS
GRATED COCONUT - 1 CUP
CARDAMOM - 4 NOS.
OIL - FOR FRYING.
METHOD:-
WASH AND SOAK RAW RICE., BOILED RICE., ORID DHAL., CHANNA DHAL., FENUGREEK FOR 2 HOURS. GRIND INTO A SMOOTH BATTER THEN ADD JAGGERY , COCONUT AND CARDAMOM. RUN THE MIXIE FOR ANOTHER 5 MINUTES. HEAT OIL IN A PAN POUR A LADDLE OF THE BATTER . WHEN IT EMERGES TURN IT TO OTHER SIDE. DEEP FRY AND SERVE HOT. ITS CHETTINADU SEPCIAL SWEET.



கந்தரப்பம்.:-
தேவையானவை:-
பச்சரிசி - 2 கப்
புழுங்கல் அரிசி - 1/4 கப்
உளுந்து - 1/4 கப்
கடலைப்பருப்பு - 1/8 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
வெல்லம் - 2 கப்
தேங்காய் துருவியது - 1 கப்
ஏலக்காய் - 4 .
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை:-
பச்சரிசி.,புழுங்கல் அரிசி., உளுந்தம்பருப்பு., கடலைப்பருப்பு., வெந்தயம் எல்லாவற்றையும் கழுவி 2 மணிநேரம் நன்றாக ஊறவைக்கவும். நைசாக அரைத்து அதில் வெல்லம்., தேங்காய்துருவல்., ஏலக்காய் சேர்த்து இன்னும் 5 நிமிடம் அரைக்கவும். எண்ணெயைக் காயவைத்து ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றவும். அப்பம் உப்பி மேலே வரும்போது திருப்பி விட்டு வேகவைத்து எடுக்கவும். சூடாக பரிமாறவும். இது செட்டிநாட்டின் ஸ்பெஷல் இனிப்பு.
மாவை நன்கு அடித்து ஊற்றினால் நன்றாக வரும்..

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

COCONUT GINGER CHUTNEY. தேங்காய் இஞ்சிச் சட்னி.

COCONUT GINGER CHUTNEY:-

NEEDED:-

GREEN CHILLIES - 4 NOS

GINGER - 1 INCH PIECE WASHED PEELED

COCONUT - GRATED 1 CUP.

FRIEND CHANNA DHAL - 1 TBLSPN

SALT - 1/2 TSP


FOR FRY :-

OIL - 1 TSP

MUSTARD - 1TSP

ORID DHAL - 2 TSP

HING/ ASAFOETIDA POWDER - 1 PINCH.

CURRY LEAVES - 1 ARK.


METHOD:-

GRIND THE INGREDIENTS COARSLY. ADD NEEDED WATER. TOSS IT WITH FRIED MUSTARD., ORID DHAL., HING AND CURRY LEAVES. SERVE IT WITH IDDLIES OR DOSAS OR UPMAS.


தேங்காய் இஞ்சிச் சட்னி:-

தேவையானவை:-

பச்சை மிளகாய் - 4

இஞ்சி - 1 இஞ்ச் துண்டு தோலுரித்து நன்கு கழுவியது.

தேங்காய் - 1 கப் துருவியது.

உப்பு - 1/2 டீஸ்பூன்.


தாளிக்க:-
கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்து - 2 டீஸ்பூன்

பெருங்காயம் - 1 சிட்டிகை

கருவேப்பிலை - 1 இணுக்கு.


செய்முறை:-

எல்லாவற்றையும் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். தேவையான தண்ணீர் சேர்க்கவும். கடுகு. உளுந்து., பெருங்காயப்பொடி., கருவேப்பிலை தாளித்து சட்னியில் கொட்டிக் கலக்கவும். சூடான இட்லி/தோசை/உப்புமாவுடன் பரிமாறவும்.

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

PRAWN GRAVY. இறால் க்ரேவி. ( செம்மீன்)

PRAWN GRAVY:-

NEEDED:-

PRAWN (UNSHELLED , INTESTINE SHOULD BE

REMOVED & THOROUGHLY WASHED ) - 1/2 KG

BIG ONION - 2 NOS PEELED , GROUND

GINGER GARLIC PASTE - 2 TSP

TOMATO - 2 NOS. GROUND.

TURMERIC - 1 PINCH

RED CHILLI POWDER - 2 TSP

CORRIANDER POWDER - 2 TSP

GARAM MASALA POWDER - 1/2 TSP

CORRIANDER LEAVES CHOPPED - 1 TSP ( OPTIONAL).

SALT - 2 TSP

OIL - 1 TBLSPN

BAY LEAF -1/4TH

KALPASIPPU - 1 PIECE

CINNAMON - 1 INCHH PIECE

CLOVE - 2 NOS.


METHOD:-

HEAT OIL IN A PAN ADD BAY LEAF., KALPASIPPU., CINNAMON., CLOVE AND GROUND ONION. SAUTE WELL ADD GINGER GARLIC PASTE. WHEN IT BECOMES BROWN ADD PRAWNS . SAUTE WELL. ADD TURMERIC PWDR., RED CHILLI PWDR., CORRIANDER PWDR., GARAM MASLA PWDR, SALT. SAUTE FOR ONE MINUTE AND ADD THE GROUND TOMATO. POUR 2 CUPS OF WATER AND BRING TO BOIL. SIMMER FOR 10 MINUTES TILL DONE. REMOVE FROM FIRE SPRINKLE THE CORRIANDER LEAVES AND SERVE HOT WITH PLAIN RICE OR CHAPPATIS OR NAAN.


இறால் க்ரேவி:-

தேவையானவை:-

இறால்( ஓடு நீக்கி., குடலை நன்கு நீக்கி., நன்கு கழுவியது) -1/2 கிலோ

பெரிய வெங்காயம் - 2 தோலுரித்து அரைத்தது.

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

தக்காளி - 2 அரைத்தது.

மஞ்சள் பொடி - 1 சிட்டிகை

மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

மல்லித்தூள் -2 டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்

கொத்துமல்லித் தழை - 1 டீஸ்பூன்( விரும்பினால்)

உப்பு - 2 டீஸ்பூன்.

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

பட்டை இலை - 1/4

கல்பாசிப்பூ - 1

பட்டை - 1 இஞ்ச் துண்டு

கிராம்பு - 2


செய்முறை:-

பானில் எண்ணெயைக் காயவைத்து பட்டை., இலை. கல்பாசிபூ., கிராம்பு., அரைத்த வெங்காயம் போட்டு வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்டைப் போட்டு ப்ரவுன் ஆகும் வரை வதக்கவும். இறாலை போட்டு நன்கு வதக்கி மஞ்சள் பொடி., மிளகாய்ப் பொடி., மல்லிப் பொடி., கரம் மசாலா பொடி., உப்பு சேர்க்கவும். 1 நிமிடம் நன்கு வதக்கி அரைத்த தக்காளியைச் சேர்க்கவும். 2 கப் நீர் ஊற்றி நன்கு கொதி வரச் செய்து 10 நிமிடம் மூடி போட்டு வேகவைத்து இறக்கவும். கொத்துமல்லி தூவி சூடான சாதம்/ சப்பாத்தி/நான் ஆகியவற்றோடு பரிமாறவும்.

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

DRUMSTICK AUBERGINE PACHADI. முருங்கைக்காய் கத்திரிக்காய் பச்சடி

DRUMSTICK AUBERGINE PACHADI:-

NEEDED:-

DRUMSTICK - 2 CUT INTO 3 INCH PIECES

AUBERGINE/EGGPLANT/BRINGAL - 4 NOS. CUT INTO CROSSWISE.

SMALL ONIONS - 8 NOS PEELED CUT LENGTHWISE

TOMATO - 1 NO DICED

GREEN CHILLIES - 2 SLIT OPEN

BOILED THUVAR DHAL - 1 CUP

TAMARIND - 1 AMLA SIZE BALL

SALT - 1 1/2 TSP

SAMBAR POWDER - 1 TSP

TURMERIC - 1 TSP

OIL - 2 TSP

MUSTARD - 1 TSP

ORID DHAL - 1 TSP

ASAFOETIDA - 1/8 PIECE.

RED CHILLIES - 2 NOSHALVED.

CURRY LEAVES - 1 ARK.


METHOD :-

KEEP DHALL IN A PAN ADD 2 CUPS OF WATER AND ADD DRUMSTICK., AUBERGINE., SMALL ONIONS., TOMATO., TURMERIC., GREEN CHILLIES., ASAFOETIDA., SAMBAR POWDER. COOK TILL THE VEGGIES TENDER. SOAK THE TAMARIND AND SALT IN HALF CUP WATER AND SQUEEZE THE PULP. ADD THIS PULP TO THE BOILED MIXTURE. COOK FOR ANOTHER 3 MINUTES. HEAT OIL IN A IRON LADDLE ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL., THEN ADD RED CHILLIES AND CURRY LEAVES AND SEASON THIS IN PACHADI AND SERVE HOT WITH PLAIN RICE OR CURD RICE OR WITH IDDLIES OR DOSAS.


முருங்கைக்காய் கத்திரிக்காய் பச்சடி.:-

தேவையானவை:-

முருங்கைக்காய் - 2., 3 இன்ச் துண்டுகளாக நறுக்கவும்.

கத்திரிக்காய் - 4 குறுக்கே கிராசாக நறுக்கவும்.

சின்ன வெங்காயம் - 8 உரித்து நெட்டாக நறுக்கவும்.

தக்காளி - 1 துண்டுகள் செய்யவும்.

பச்சை மிளகாய் - 2 . ரெண்டாக வகிரவும்

வேகவைத்த துவரம் பருப்பு - 1 கப்

புளி - 1 நெல்லி அளவு

உப்பு - 1 1/2 டீஸ்பூன்

சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்

மஞ்சள் பொடி - 1 சிட்டிகை

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்து - 1 டீஸ்பூன்

பெருங்காயம் - 1/8 இன்ச் துண்டு

வரமிளகாய் - 2 இரண்டாக கிள்ளிவும்

கருவேப்பிலை - 1 இணுக்கு.


செய்முறை:-

ஒரு பானில் வெந்த பருப்புடன் 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் முருங்கைக்காய்., கத்திரிக்காய்., சின்ன வெங்காயம்., தக்காளி., பச்சைமிளகாய்., மஞ்சள் பொடி., சாம்பார் பொடி., பெருங்காயம் சேர்த்து மூடி போட்டு வேகவிடவும். புளியை அரை கப் தண்ணீரில் உப்புடன் கரைத்து காய்கள் வெந்ததும் சேர்க்கவும். 3 நிமிடம் கொதித்து சேர்ந்ததும் ஒரு இரும்புக் கரண்டியில் ( தாளித்துக் கொட்டும் கரண்டி) எண்ணெய் ஊற்றி கடுகுபோட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும்., வரமிளகாய்., கருவேப்பிலை போடவும். தாளித்ததை பச்சடியில் கொட்டி சூடாக சாதத்தோடோ., தயிர்சாதத்தோடோ., இட்லி., தோசையோடோ பரிமாறவும்.

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

PLANTAIN FLOWER KOLA. வாழைப்பூக் கோளா.



PLANTAIN FLOWER KOLA:-

NEEDED:-

PLANTAIN FLOWER - 1/2

SOAKED THUVAR DHAL- 1 CUP

BIG ONION - 1 CHOPPED
RED CHILLIES- 5 NOS

SOMPH - 1 TSP

JEERA - 1/2 TSP

PEPPER CORN - 5

COCONUT - 2 INCH PIECE

OIL - 75 ML

MUSTARD - 1 TSP

ORID DHAL - 1 TSP

CURRY LEAVES - 1 ARK

SALT - 1 TSP


METHOD :-

REMOVE THE VEINS FROM EACH FLORET. GRIND RED CHILLIES., SOMPH., JEERA., PEPPER., SALT., COCONUT. SEPERATELY GRIND THE THUVAR DHAL COARSLY. LASTY GRIND THE FLORETS. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. WHEN IT BECOMS BROWN ADD CURRY LEAVES AND CHOPPED ONION. ADD THE GROUND MASALA AND SAUTE WELL. AFTER 3 MINUTES ADD THE GROUND FLORETS AND DHALL. STIRR WELL. KEEP IT IN SOME AND STIRR OFTEN. OTHR WISE ITS STIKY TO THE BOTTOM. COOK FOR 10 TO 15 MINUTES TILL DONE. REMOVE FROM FIRE AND SEVE HOT WTH SAMBAR RICE OR CURD RICE.


வாழைப்பூக் கோளா:-

தேவையானவை:-

வாழைப்பூ - 1/2

ஊறவைத்த துவரம் பருப்பு - 1 கப்

பெரிய வெங்காயம் - 1

சிவப்பு மிளகாய் - 5

சோம்பு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

மிளகு - 5

தேங்காய் - 2 இன்ச் துண்டு

எண்ணெய் - 75 மிலி

கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்து - 1 டீஸ்பூன்

கருவேப்பிலை - 1 இணுக்கு

உப்பு - 1 டீஸ்பூன்.


செய்முறை:-

வாழைப்பூக்களை நரம்பு எடுத்து சுத்தம் செய்யவும். மிளகாய்., சோம்பு., சீரகம்., மிளகு., உப்பு., தேங்காய் சேர்த்து அரைக்கவும். பருப்பை தனியாக கொரகொரப்பாக அரைக்கவும். வாழைப்பூக்களையும் தனியாக அரைக்கவும். பானில் எண்ணெயைக் காய வைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் வெங்காயம் கருவேப்பிலை போடவும். அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும். 3 நிமிடத்துக்குப் பிறகு அரைத்த பூவைப் போடவும். பின் பருப்பைச் சேர்த்து நன்கு கிளறவும். சிம்மில் வைத்து அடிக்கடி கிளறவும் . இல்லாவிட்டால் அடி பிடிக்கும். 10லிருந்து 15 நிமிடங்கள் வரை கிளறி உதிரியாக வெந்ததும் இறக்கி சாம்பார் சாதம் அல்லது தயிர் சாதத்துடன் பரிமாறவும். இதன் துவர்ப்புச் சுவை ரத்தத்தை சுத்திகரிக்கும்.

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

SOOJI VEG UPMA. வெள்ளை ரவா காய்கறி உப்புமா..

SOOJI VEG UPMA.:-



NEEDED:-

SOOJI - 1 CUP

BIG ONION - 1 CHOPPED

CARROT, BEANS, CAULIFLOWER, PEAS - CHOPPED 1CUP

CASHEWS - 10

GHEE - 2TSP

GREEN CHILLY - 1 SLIT OPEN

CURRY LEAVES - 1 ARK

MUSTARD - 1 TSP

ORID DHAL - 1 TSP

OIL - 10 ML

WATER - 2 CUPS

SALT 1/3 TSP


METHOD:-

FRY THE SOOJI IN A PAN FOR 3 MINUTES. HEAT OIL IN ANOTHER PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN ADD ONION., GREEN CHILLY., CURRY LEAVES. SAUTE FOR 3 MINUTES. POUR 2 CUPS OF WATER AND BRING TO BOIL. WHILE BOILING SIMMER THE GAS ADD THE SOOJI AND SALT AND STIRR WELL. COVER IT FOR 2 MINUTES AND SWITCH OFF THE GAS. OPEN THE LID AFTER 2 MINUTES AND SERVE HOT WITH THAKKALITH THIRAKKAL.


வெள்ளை ரவா உப்புமா:-

தேவையானவை :-

வெள்ளை ரவை - 1 கப்

பெரிய வெங்காயம் - பொடியாக அரிந்தது.

பச்சை மிளகாய் - 1 இரண்டாக வகிர்ந்தது.

கருவேப்பிலை - 1 இணுக்கு.

கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்து - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 10 மிலி

தண்ணீர் - 2 கப்

உப்பு - 1/3 டீஸ்பூன்


செய்முறை:-

வெறும் வாணலியில் வெள்ளை ரவையை 3 நிமிடம் பச்சை வாசனை போக வறுக்கவும். ஒரு பானில் எண்ணெயைக் காய வைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் பச்சை மிளகாய்., வெங்காயம்., கருவேப்பிலை போட்டு 2 நிமிடம் வதக்கி 2 கப் தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் கொதிக்கும் போது தீயை மெல்லியதாக வைத்து உப்பு., ரவையைத் தூவி நன்கு கரண்டியால் கிளறவும். ஒரு மூடியைப் போட்டு 2 நிமிடம் வேக விடவும். 2 நிமிடம் கழித்து திறந்து சூடாக தக்காளித் திறக்கலுடன் பரிமாறவும்.

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

INDIAN PENNYWORT THUVAIYAL. வல்லாரைத் துவையல்.

INDIAN PENNYWORT THUVAIYAL.:-

NEEDED:-

INDIAN PENNYWORT - 1 HANDFUL

GREEN CHILLIES - 3 NOS (SLIT OPEN)

GRATED COCONUT - 1 CUP

BIG ONION - 1 NO

TAMARIND - 2 PODS.

SALT - 1/2 TSP

OIL - 2 TSP

MUSTARD - 1 TSP

ORID DHAL - 2 TSP

ASAFOETIDA - 1/10 INCH PIECE.


METHOD:-

WASH THE INDIAN PENNY WORT AND KEEP ASIDE. PEEL WASH AND CHOP THE ONION. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN ADD ASAFOETIDA AND CHILLIES AND CHOPPED ONION. SAUTE WELL. ADD SALT., TAMARIND., GRATED COCONUT. SWITCH OFF THE STOVE THEN ADD THE INDIAN PENNYWORT. AND STIRR WELL. AFTER COOLING GRIND IT . SERVE IT WITH IDDLIES OR DOSAS OR WITH VARIETY RICES.


ITS GOOD FOR MEMORY POWER.



வல்லாரைத்துவையல்:-
தேவையானவை:-

வல்லாரை - 1 கைப்பிடி

பச்சை மிளகாய் - 3

துருவிய தேங்காய் - 1 கப்

பெரிய வெங்காயம் - 1

புளி - 2 சுளை

உப்பு - 1/2 டீஸ்பூன்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்து - 2 டீஸ்பூன்

பெருங்காயம் - 1/10 இஞ்ச் துண்டு.


செய்முறை:-

வல்லாரையை நன்கு அலசி வைக்கவும். வெங்காயத்தை தோலுரித்துக் கழுவிப் பொடியாக நறுக்கவும். பானில் எண்ணெயைக் காய வைத்து கடுகு போட்டு வெடித்ததும். உளுந்து போட்டு சிவந்ததும் பெருங்காயம்., பச்சை மிளகாய்., வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். உப்பு., புளி., தேங்காய் போட்டு வதக்கி அடுப்பை அணைக்கவும். பின் அதில் வல்லாரையைப் போட்டு நன்கு கலக்கவும். ஆறியபின் துவையலாக அரைத்து இட்லி., தோசை., அல்லது கலவை சாதங்களுடன் பரிமாறவும்.


வல்லாரை ஞாபக சக்தியைத் தூண்ட வல்லது.


Related Posts Plugin for WordPress, Blogger...